பா.இரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’, ‘ரைட்டர்’, ‘குதிரைவால்’ படங்களை அடுத்து, ஐந்தாவது தயாரிப்பாக இப்படம் வெளிவர உள்ளது.
சுரேஷ் மாரி இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் வெங்கட் பிரபு, மற்றும் பா.இரஞ்சித் இருவரோடும் பணியாற்றியவர். நடிகர் தினேஷ் , மாறன் , ஊர்வசி நடிப்பில் உருவாகியிருக்கும் இப்படம் நகைச்சுவையோடு கூடிய உணர்வுப்பூர்வமான குடும்பக்கதையாக உருவாகியிருக்கிறது.
விரைவில் இப்படம் தியேட்டரில் வெளியாகவிருக்கிறது. நீலம் புரொடக்சன்ஸ் , லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ், கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.