டாப்ஸி பன்னுவின் நடிப்பில், சபாஷ் மிது திரைப்படம், இந்தியாவில் கிரிக்கெட்டை மாற்றியமைத்த மிதாலி ராஜின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான சபாஷ் மிது திரைப்பட டீஸர் இன்று வெளியிடப்பட்டது. 2022 ஐசிசி மகளிர் உலகக் கோப்பையில் இந்திய பெண்கள் அணியின் கேப்டனாக, நீல நிற உடையணிந்த பெண்களை வெற்றிகரமாக வழிநடத்தி, பல உலக சாதனைகளைத் தொடர்ந்து முறியடித்து வரும் இந்திய கேப்டனான மிதாலி ராஜின் வாழ்க்கையை இப்படம் விவரிக்கிறது.
டீஸர் ஜென்டில்மேன் விளையாட்டான கிரிக்கெட்டில் பெண்கள் பங்குகொண்ட நீல நிற அணியின் சாதனைகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது, மிதாலியின் வாழ்க்கையில் நடந்த உயர்வு மற்றும் தாழ்வுகள்,பின்னடைவுகள் மற்றும் மகிழ்ச்சியின் தருணங்களை படம் அழகாக விவரிக்கிறது. இப்படத்தில் டாப்ஸி பண்ணு டைட்டில் ரோலில் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திறமை மிகு நடிகரான விஜய் ராஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
சபாஷ் மிது, மிதாலியின் பெருமை மிகு பயணத்தையும், உலக அரங்கில் அவரது எழுச்சியையும் திரையில் கொண்டு வருவதற்காக, உள்நாடு மற்றும் சர்வதேச இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை Viacom18 Studios தயாரித்துள்ளனர், சபாஷ் மிதுவின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக அஜித் அந்தாரே பணியாற்ற, ஸ்ரீஜித் முகர்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார் மற்றும் ப்ரியா அவென் இப்படத்தினை எழுதியுள்ளார்.