full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

அமோக வெற்றி பெற்ற அருள்பதி

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க தேர்தல்களை அடுத்து, தமிழ் திரையுலகம் பரபரப்பாக எதிர்பார்த்த சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கான தேர்தல் 24.12.17 அன்று நடந்தது.

இந்தத் தேர்தலில் வாக்குரிமை உள்ள 524 பேரில் 469 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர். தற்போதைய தலைவர் அருள்பதி தலைவராக மீண்டும் போட்டியிட்டார்.

இணைச் செயலாளர் பொறுப்பைத் தவிர்த்து அனைத்து பொறுப்புகளுக்கும் அருள்பதி தரப்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட மெட்ரோ ஜெயக்குமார் 169 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட நேசமணி 142 வாக்குகளும், கலைப்புலி சேகரன் 140 வாக்குகளும் பெற்றனர்.

துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி சீனிவாசலு 216 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கே ராஜன் 199 வாக்குகள் பெற்றார். இணைச் செயலாளர் பதவிக்கு ஸ்ரீ ராம் 212 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜகோபாலன் 173 வாக்குகள் பெற்றார். பொருளாளர் பொறுப்புக்கு பாபுராவ் 201 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சித்திக் 142 வாக்குகள் பெற்றார்.

அருள்பதி 248 வாக்குகளும் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஞானவேல்ராஜா 194 வாக்குகளும் பெற்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட டிஏ அருள்பதி அமோக வெற்றிப் பெற்றார்.