பட ரிலீஸ், அடுத்த வருசம் தான்… சோகத்தில் ரசிகர்கள்

News

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் `2.0′. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். எமி ஜாக்சன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் இப்படத்தின் டப்பிங் பணிகள் முழுவதுமாக முடிந்து விட்ட நிலையில், ஒரு பாடல் மற்றும் ஒரு சில காட்சிகள் மட்டுமே மீதமிருப்பதால் இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் இயக்குநர் ஷங்கர் தீவிரமாக இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆசியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம், தீபாவளி ரிலீசாக வெளியாக இருந்தது. ஆனால் படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகள் இன்னும் மீதமிருப்பதால் படத்தை தீபாவளியன்று வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே குடியரசு தினத்தை முன்னிட்டு அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 25-ல் படம் வெளியாகும் என்று படத்தை தயாரித்து வரும் லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைவர் ராஜு மகாலிங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

`3டி’ வடிவிலும் வெளிவர இருக்கும் இப்படத்தை, ஐமேக்ஸ் திரையரங்கிலும் வெளியிட திட்டமிட்ட படக்குழு முடிவு செய்துள்ளது.