full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

“விஜயா புரொடக்க்ஷன்ஸ்” தயாரிப்பில் ,”விஜய் சேதுபதி” நடிப்பில் விஜய் சந்தர் இயக்கியுள்ள புதிய படம் ” சங்கத்தமிழன் “

பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், தளபதி விஜயின் பைரவா உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.

பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி அவர்கள் தயாரித்துள்ள இந்த சங்கத்தமிழன் டத்தை இயக்குனர் விஜய் சந்தர் இயக்கியுள்ளார் .

பி.பாரதி ரெட்டி அவர்களுக்கு இது 6 வது படமாகும்.

விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள  இப்படத்தில் இவருக்கு ஜோடியாக  நடிகை ராஷிக்கண்ணா மற்றும் நடிகை நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர் .இவர்களுடன்  இந்த படத்தில் நாசர் , சூரி  ,அசுதோஷ் ராணா , ரவி கிஷான் , மொட்டை ராஜேந்திரன் , மாரிமுத்து , ஜான் விஜய் மற்றும் ஸ்ரீமான்  போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர்களான விவேக்-மெர்வின் ஆகியோர்  இசையமைத்துள்ளார்.

ஒளிப்பதிவு R . வேல்ராஜ் ,  கலை இயக்கம் M .பிரபாகரன், சண்டை பயிற்சி அனல் அரசு , மற்றும் படத்தொகுப்பினை பிரவீன் K .L மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் படத்தலைப்பு  இன்று வெளியாகியுள்ளது .

தொழில்நுட்பக்குழு :

இயக்கம் – விஜய் சந்தர்

தயாரிப்பு – பி.பாரதி ரெட்டி

ஒளிப்பதிவு   – R.வேல்ராஜ்

படத்தொகுப்பு     – பிரவீன் K.L

சண்டை  பயிற்சி  – அனல்  அரசு

கலை இயக்குனர் – பிரபாகர்

நிர்வாக தயாரிப்பு – ரவிச்சந்திரன்  , குமரன் .

மக்கள் தொடர்பு    -ரியாஸ் கே அஹமது.