‘வட சென்னை’ படத்தின் முதலிரவு காட்சிகள் நீக்கப்படும் – இயக்குனர் வெற்றிமாறன்!

News

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க சில தினங்களுக்கு முன் வெளியானது ‘வட சென்னை’. அநேக மக்களால் பாராட்டப்பட்ட இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படத்தில் மீனவ சமுதாய மக்களின் வாழ்வியலை கொச்சைப் படுத்துவதாக மீனவ அமைப்பினர் வெற்றிமாறன் மீதும் தனுஷ் மீதும் காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குனர் வெற்றிமாறன், ‘ படத்தின் சில காட்சிகள் குறிப்பாக படகில் நடந்த முதலிரவு காட்சிகள் நிச்சயமாக நீக்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் சரியாக 8 அல்லது 10 நாட்களில் அந்த காட்சிகள் திரையரங்கில் இருந்து நீக்கப்படும். எந்த சமுதாயத்தையும், எந்த அமைப்பையும் காயப்படுத்துவது எங்களது நோக்கமல்ல.’ என்று விளக்கம் அளித்துள்ளார்.