full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இயக்குநரான தயாரிப்பாளரின் முதல் பாடல்

அமைதிப்படை-2, கங்காரு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இயக்குனராக அறிமுகமாகியிருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’.

இதில் அரீஷ் குமார் கதாநாயகனாகவும், ஸ்ரீபிரியங்கா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். மேலும் இயக்குனர் சீமான் காவல் துறை உயரதிகாரியாகவும், ‘வழக்கு எண்’ முத்துராமன், இயக்குநர் இ ராமதாஸ், ‘ஆண்டவன் கட்டளை’ அரவிந்த், ‘சேதுபதி’ லிங்கா, ‘பரஞ்சோதி’ படத்தின் நாயகன் சாரதி, இயக்குநர் சரவணசக்தி, வெற்றிக்குமரன், வி.கே.சுந்தர், குணசீலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பெண் காவலர்கள் இன்றைய சூழலில் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளையும், உயர் அதிகாரிகளின் பாலியல் வேட்கைக்கு உடன்படாத பெண் காவலர்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் அறிந்து ‘மிக மிக அவசரம்’ படத்தை உருவாக்கியுள்ளார் சுரேஷ் காமாட்சி.

விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குனர் பாரதிராஜா சில வாரங்களுக்கு முன் வெளியிட்டார். பின்னர் டீசரை இயக்குனர் சேரன் வெளியிட்டார். இந்நிலையில் இப்படத்தின் பாடல் ஒன்றை இயக்குனர் ராம் செப்டம்பர் 1-ம் தேதி 10 மணியளவில் வெளியிட உள்ளார்.