full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

இந்தியாவின் முதல் விண்வெளிப் படம்!

“நாணயம்”, “நாய்கள் ஜாக்கிரதை” மற்றும் “மிருதன்” ஆகிய படங்களின் மூலம் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவரானவர் சக்தி சௌந்தரராஜன்.                                            இப்போது ஜெயம் ரவியை வைத்து “டிக் டிக் டிக்” என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

முந்தைய படங்களைப் போலவே, இந்தப் படமும் முற்றிலும் மாறுபட்ட விதமாக படமாக்கப்பட்டு வருகிறது.                                                                                                                                    முழுக்க முழுக்க விண்வெளியில் நடப்பது போன்ற கதையமைப்பு கொண்ட “டிக் டிக் டிக்” திரைப்படம், இந்தியாவிலேயே முதல் விண்வெளி படம் என்பதால் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார்.D.இமானின்  பின்னணி இசை எல்லோரையும் வியக்க வைக்கும் என்று கூறப்படுகிறது. வி.ஹிதேஷ் ஜபக் தயாரிக்கும் இந்தப் படம் மிகுந்த பொருட்செலவில் தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரைலர் வருகிற நவம்பர் 24 ஆம் தேதி வெளியாக உள்ளதாக ஜெயம் ரவி மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார். “வனமகன்” சரியாக போகத நிலையில் ஜெயம் ரவி இந்தப் படத்தை மிகவும் நம்பியிருக்கிறார்.