ஒரு ரெண்டு மூணு பொண்ணுங்கள காதலிச்சிட்டு அந்த காதல் சக்ஸஸ் ஆகலனா தினமும் ஒரு பொண்ணோட உல்லாசம் அனுபவிக்கணும் அப்படின்னு நினைக்கிற ஹீரோவோட கதை தான் இது.
கதையின் நாயகன் கார்த்திக் Gitarist ஆக கிளப்பில் வேலை செய்கிறான் அவன் தினமும் ஒரு பெண்ணுடன் சந்தோஷமாக இருக்கிறான் இவன் இப்படி இருக்க காரணம் ஏற்கனவே 3 பெண்களை காதலித்து பிரிந்ததுதான் , கார்த்திக் தனது நண்பனின் திருமணத்திற்காக பெங்களூர் செல்கிறான் அங்கு அவன் நாயகியை பார்க்கிறான், அவள்மீது காதல்வசப்படுகிறான் பிறகு 7 நாட்கள் பெங்களூரை சுற்றி காட்டுகிறான் பிறகு தனது காதலை வெளிப்படுத்துகிறான் , ஆனால் நாயகி ஏற்கனவே 5 வருடங்களாக ஒருவரை காதலித்தது தற்போது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை சொல்கிறாள், கடைசியில் கார்த்திக் நாயகியை தேடி மீண்டும் சொல்கிறாரா ? இல்லை வேறு என்ன செய்கிறார் என்பதுதான் மீதி கதை…
இந்தப் பதக்கத்தோட கதைக்களம் பார்த்தீங்கன்னா அவ்வளவு அருமையாகவும் அற்புதமாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது. முதலில் இயக்குநருக்கு ஒரு வாழ்த்துக்கள்.
நல்ல வேலையும், நல்ல சம்பளம் இருந்தா தினமும் ஒரு பொண்ணு வேணுமா அப்படிங்கிறத நம்ம தமிழ்நாட்டு கலாச்சாரத்துக்கு கொஞ்சம் கருத்தில் வைத்து இயக்குனர் அதை தவிர்த்து இருக்கலாம் .
அது ஏனோ விட்டுட்டாரு.
அதன் பிறகு பார்த்தீங்கன்னா பின்னணி இசை காட்சிக்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக இசையமைச்சு கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் அவருக்கு ஒரு வாழ்த்துக்கள்.
அடுத்து ஒளிப்பதிவு காட்சிக்கு என்ன தேவையோ அதையே அத அப்படியே தன்னோட கேமராவால் கவ்வி கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் படம் பார்ப்பதற்கு ரொம்ப கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.
அப்புறமா சொல்றதுக்கு கிளைமாக்ஸ் தான் ஆனா அந்த கிளைமாக்ஸ் கொஞ்சம் கடுப்பு ஏற்றினாலும் ஓகே ரகம் தான் இந்த டூடி