சென்னை (செப்டம்பர் 16, 2022): டிஸ்னி+ ஹாட்ஸ்டார் புதிதாக வரவிருக்கும் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் தொடரான ‘ஃபால்’ (Fall) வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வெப் சீரிஸில், தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். நடிகை அஞ்சலி, எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இத்தொடரில் நடித்துள்ளனர்.
‘ஃபால்’ (Fall) தொடரை இயக்குவதுடன் ஒளிப்பதிவும் செய்கிறார் இயக்குநர் சித்தார்த் ராமசாமி. அஜேஷ் இசையமைக்க, படத்தொகுப்பை கிஷன் C செழியன் கவனிக்கிறார்.
‘ஃபால்’ தொடர் ITV company நிறுவனமான Armoza Formats விநியோகம் செய்த, Productions Pixcom Inc நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, மைக்கேல் ஆலன் எழுத்தில், விருது பெற்ற “வெர்டிஜ்” எனும் கனடிய வெப் சீரிஸின் அதிகாரப்பூர்வ ரீமேக்காகும்.