பரபரப்பான ஒரு திகில் படைப்பாக உருவாகியுள்ள படம் ‘கிராண்மா’ . இப்படத்தை ஷிஜின்லால் எஸ். எஸ். இயக்கியுள்ளார். யஷ்வந்த் பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெசின் ஜார்ஜ் இசை அமைத்துள்ளார்.ஜி எம் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ். ஆர், விநாயகா சுனில்குமார் தயாரித்துள்ளனர். ‘கிராண்மா’ படத்தின் ஊடகங்களுக்கான சந்திப்பு நடந்தது.

இப்படம் இம்மாதம் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது .அனைவரும் திரையரங்கு சென்று கண்டுகளித்து ஆதரவு தர வேண்டுகிறேன்” என்றார்.
நிகழ்ச்சியில் நடிகை சார்மிளா பேசும்போது ,
“இந்தப் படம் ஒரு நல்ல படம். எந்த முகச்சுழிப்பும் இல்லாமல் குடும்பத்துடன் வந்து பார்க்கும்படி இந்த படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சோனியா அகர்வால் ,விமலா ராமன் போன்ற நட்சத்திரங்களுடன் நான் நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. எங்களைத் தயாரிப்பாளர் சௌகரியமாகக் கவனித்துக் கொண்டது மறக்க முடியாததாக இருந்தது.
சண்டை இயக்குநர் முகேஷ் ராஜா பேசும்போது,
” இந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். சோனியா அகர்வாலைச் சண்டைக் காட்சிகளில் நடிக்க வைத்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. சோனியா அகர்வால் சண்டைக்காட்சிகளில் தைரியமாக நடித்தார். படத்தின் 80 சதவிகித சண்டைக் காட்சிகளில் அவர் டூப் இல்லாமல் நடித்தார். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லா நடிகர்களும் நல்ல ஒத்துழைப்புக் கொடுத்த படமாக கிராண்மா இருந்தது” என்றார்.