full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

‘கேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் உலகெங்கும் ஜூன் 14 முதல்

சென்னை, மே 24, 2019: YNOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கத்தில், டாப்சீ பண்ணு நடிக்கும் ‘கேம் ஓவர்’ தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படம்  U/A சர்டிபிகேட்டுடன் வரும் 2019, ஜூன் 14ம் தேதி உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தியில் வெளியிடப்பட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

இது குறித்து எஸ். சஷிகாந்த், YNOT ஸ்டுடியோஸ், “தமிழ் ரசிகர்களுக்காக ‘கேம் ஓவர்’ எனும் வித்தியாசமான கதைகளத்துடன் ஒரு திகில் படத்தை வெளியிடுவதில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம். நயன்தாரா நாயகியாக நடித்த அஷ்வின் சரவணனின் முதல் படைப்பான மாயா(2015) திரைப்படத்தின் வணிகரீதியிலான மகத்தான வெற்றி மற்றும் சிறப்பான விமர்சனங்களுக்கு பின், வரையறைகளை பின்னுக்குத் தள்ளி, முற்றிலும் வித்தியாசமான கதைகளத்துடன், கேம் ஓவர் ஒரு முன்னோடி முயற்சியாக உருவாகியிருக்கிறது”.

டாப்சீ பண்ணு பேசும் போது, “கேம் ஓவர் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகிற்கு வருவதில் உற்சாகமாகமடைந்துள்ளேன். இந்த திரைப்படத்தின் கதையை கேட்ட உடனேயே, அதிலும் குறிப்பாக, இயக்குனர் அஷ்வின் சரவணன் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் கூட்டணியோடு, பறந்து விரிந்த  ரசிகர்களை ஈர்க்க வல்ல கதையும் இணைந்திட, எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை வந்தது.  மிகச்சில திரைப்படங்களே எதிர்பார்ப்புகளை தாண்டி வெற்றி பெறும். அதில் இதுவும் ஒன்று. நான் தேர்ந்தெடுத்து நடிக்கும் இது போன்ற கதைகள்-கதாபாத்திரங்கள், ரசிகர்கள் என் மீது வைத்ததிருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்”.

அஷ்வின் சரவணன் குறிப்பிடுகையில், “மாயா இன்று வரை மக்கள் மனதில் ஞாபகத்தில் இருக்கிறது, இன்றும் விரும்பப்படுகிறது என்றால் அது ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் ஒரு படைப்பாளிக்கு வலுசேர்த்து, ஒரு கதையை செதுக்குவதற்கான கால இடைவெளியை தருகிறது.  நான்கு வருடங்களுக்கு பிறகு ஒரு திரைப்பட வெளியீட்டை எதிர்நோக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பல ஆண்டுகளாக YNOT ஸ்டுடியோஸ் கருத்து உள்ளடக்கத்துடன் கூடிய திரைப்படங்களை ஊக்குவித்து வருகிறது. அவர்களது இந்த ஒத்துழைப்பும், ஊக்குவித்தலும் இல்லாமல் ‘கேம் ஓவர்’ இன்று இந்த இடத்தில் இருந்திருக்காது. டாப்சீ பண்ணு இப்படத்தின் மூலம் தமிழ் திரைவுலகுக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார் என்றே நம்புகிறேன். கேம் ஓவர் வெளியீடு மற்றும் வரவேற்ப்பை எதிர்நோக்கி ஆவலோடு இருக்கிறேன்”.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:

டாப்சீ பண்ணு, வினோதினி, ரம்யா, சஞ்சனா நடராஜன்,

அனீஸ் குருவில்லா, மாலா பார்வதி மற்றும் பலர்.

தயாரிப்பாளர்: எஸ். சஷிகாந்த்

இணை-தயாரிப்பாளர்: சக்கரவர்த்தி ராமச்சந்திரா

ஒளிப்பதிவு: ஏ வசந்த்

படத்தொகுப்பு: ரிச்சர்டு கெவின்

இசை: ரான் இதான் யோஹான்

கலை: சிவசங்கர்

சண்டை பயிற்சி: ‘ரியல்’ சதீஷ்

எழுத்து: அஷ்வின் சரவணன் & காவ்யா ராம்குமார்

இயக்கம்: அஷ்வின் சரவணன்

தயாரிப்பு: YNOT ஸ்டுடியோஸ்

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்