மணிரத்னம் வெளியிடும் #காந்தாரி பட டிரைலர் !* *R.கண்ணன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா

cinema news Trailers
0
(0)

மணிரத்னம் வெளியிடும் #காந்தாரி பட டிரைலர் !* *R.கண்ணன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் கலக்கும் ஹன்சிகா

Masala Pix நிறுவனம் சார்பில் ஆர்.கண்ணண் தயாரித்து, இயக்க, ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் “காந்தாரி” திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

இதன் இசை மற்றும் டிரைலரை இந்தியாவின் ஒப்பற்ற இயக்குநர் மணிரத்னம் ஆன்லைனில் வருல் 12ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார்.

இந்து அறநிலையத்துறை அதிகாரியாக வேலை பார்க்கும் இளம்பெண், பல காலத்திற்கு முன் ஒரு மன்னன் கட்டிய கந்தர்வக்கோட்டையை ஆராயச் செல்கிறார். பொக்கிசங்களைத் தேடிச் செல்லும் அவருக்கு, அங்கே பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. பல திருப்பங்களுடன் பரபரப்பான திரைக்கதையில், இப்படம் ரசிகர்களுக்குப் புத்தம் புது அனுபவமாகவும் இருக்கும்.

ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் முதன்முறையாக இந்து அறநிலையத்துறை அதிகாரி, நரிக்குறவப் பெண் என இரட்டை வேடத்தில், நடிக்கிறார். அவரது திரைப் பயணத்தில் இப்படம் அவருக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும்.
மேலும், மெட்ரோ ஷிரிஷ்,மயில்சாமி, தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், ஸட்ண்ட் சில்வா, வினோதினி, பவன், பிரிகிடா சகா, வடிவேல் முருகன், கலைராணி ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்குநர் கண்ணன் Masala Pix நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரித்து, இயக்கியுள்ளார். இப்படத்தின் கதையைத் தொல்காப்பியன் எழுதியுள்ளார், திரைக்கதையை தனஞ்செயன் எழுதியுள்ளார். வசனங்களை ஸ்ரீனி எழுதியுள்ளார். ஒளிப்பதிவை பாலசுப்பிரணியம் செய்கிறார். படத்திற்கு LV கணேஷ் முத்து இசையமைத்துள்ளார், எடிட்டிங்க் பணிகளை ஜிஜிந்த்ரா கவனிக்கிறார். சண்டைக்காட்சிகளை ஸட்ண்ட் சில்வா வடிவமைத்துள்ளார். தயாரிப்பு மேற்பார்வை பணிகளை சிவசங்கரன் செய்துள்ளார். மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன் செய்கிறார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.