கோலிசோடா-2க்கு குரல் கொடுத்த கெளதம் மேனன்

News

விஜய் மில்டன் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரீ ராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற `கோலிசோடா’ படத்தின் இரண்டாவது பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த பாகத்தை விஜய் மில்டனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரஃப் நோட் பட நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி, நடிகை சுபிக்‌ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரத்தை விஜய் மில்டன் ரகசியமாகவே வைத்திருக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வருகிற செப்டம்பர் 8-ஆம் வெளியாக இருப்பதாக விஜய் மில்டன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இந்த டீசருக்கு இயக்குநர் கவுதம் மேனன் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கவுதம் மேனனின் குரலில் டீசர் நல்லபடியாக வந்திருப்பதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.