கோலாகலமாக துவங்கிய ஜெயம் ரவியின் ‘சைரன்’ படபிடிப்பு..!

cinema news
0
(0)
Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான  “சைரன்” படத்தின் படப்பிடிப்பு கோலகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் ‘ஜெயம்’ படம் மூலம் அறிமுகமாகி, ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான பாத்திரம் மற்றும் வித்தியாசமான கதைகளங்களால் ரசிகர்களை மகிழ்வித்து, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி, அடுத்ததாக “சைரன்” எனும் பிரமாண்ட படத்தில் நடிக்கிறார். இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மிகப்பிரமாண்ட பொருட்செலவில்,  குடும்ப அம்சங்கள்  நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் ஜோடி சேர்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை அனுபமா பரமேஷ்வரன் நடிக்கிறார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

சமீபத்தில் வெளியான மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் காட்சித்துணுக்கு இப்போதே படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. தற்போது இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம் 
எழுத்து இயக்கம் – ஆண்டனி பாக்யராஜ் தயாரிப்பு – சுஜாதா விஜய்குமார்
இணை தயாரிப்பாளர்: அனுஷா விஜய்குமார் இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: செல்வகுமார் S.K
எடிட்டர்: ரூபன்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: கே.கதிர்
கலை இயக்குனர்: சக்தி வெங்கட்ராஜ் M சண்டைக்காட்சிகள்: திலிப் சுப்பராயன் பாடல் நடன அமைப்பாளர்: பிருந்தா
ஆடை வடிவமைப்பாளர்: அனு பார்த்தசாரதி, அர்ச்சா மேத்தா, நித்யா வெங்கடேசன்
ஒலி வடிவமைப்பாளர்: சுரேன் G அழகியகூத்தன் S ஒப்பனை: மாரியப்பன் ஆடைகள்: பெருமாள் செல்வம்
VFX : டிடிஎம் லவன் குசன்
விளம்பர வடிவமைப்பாளர்: யுவராஜ் கணேசன் வண்ணம்: பிரசாத் சோமசேகர்
DI: நாக் ஸ்டுடியோஸ்
ஸ்டில்ஸ் : கோமளம் ரஞ்சித்
நிர்வாக தயாரிப்பாளர்: ஓமர்
தயாரிப்பு நிர்வாகி: சக்கரத்தாழ்வார் G தயாரிப்பு மேலாளர்: அஸ்கர் அலி
மோஷன் போஸ்டர்: வெங்கி (வெங்கி ஸ்டுடியோஸ்).

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.