full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

முக்கியச் செய்திகள்!

 

* ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை காலை 10.30 மணிக்கு சந்திக்கிறார் நடிகர் விஷால். ஆர்.கே.நகர் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மீனவர்கள் குறித்து முறையிட உள்ளதாக தகவல்.

*நாகை: படகு பழுதால் காமேஸ்வரம் அருகே இலங்கை மீனவர்கள் 3 பேர் கரை ஒதுங்கியுள்ளனர் – கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை.

*காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படையோடு, தூத்தூர் பகுதி மீனவர்களையும் அழைத்து செல்ல மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவு. மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று நிர்மலா சீதாராமன் உத்தரவு.

*குஜராத் சட்டமன்ற தேர்தல்: 89 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. ஆதார் எண் இருந்தால் ஒரு மணி நேரத்தில் இலவச தரிசனம் – புதிய திட்டத்தை அமல்படுத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு.

*2 கட்டமாக நடைபெறும் குஜராத் தேர்தல் முடிவுகள் டிச.18ம் தேதி வெளியாகிறது.

*இடைதேர்தல் அமைதியாக நடைபெற ஆயிரத்து 500 காவல் அதிகாரிகள் நியமனம் – ஆர்.கே.நகரில், வெளிமாவட்ட வாகனங்களுக்கு தடையில்லை என்றும் காவல்துறை ஆணையர் விளக்கம்.

*மேட்டூர் நீர்மின் நிலையத்தின் மதகில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக 7,500 கன அடி நீர் வெளியேற்றம். நெஞ்சுப்பேட்டையில் உள்ள இரண்டாவது கதவணை மதகின் பழுதை சரி செய்யும் பணிக்காக தண்ணீர் வெளியேற்றம்.

*கன்னியாகுமரி: ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்கள் குறித்த விவரங்களை சேகரிப்பதற்காக நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரை புயல் கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி ஆய்வு.

*தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாநிலம் முழுவதும் இன்று மெகா லோக் அதாலத் நடைபெறவுள்ளது. 531 அமர்வுகள் மூலம் வங்கி, தொழிலாளர் நலன் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் 1.25 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகளில் விசாரணை.

*எனக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லை – சேகர் ரெட்டி பரபரப்பு பேட்டி. ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் டைரி சிக்கியதாகவும், அதில் அமைச்சர்களுக்கு பணம் கொடுத்ததாக இடம்பெற்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சேகர் ரெட்டி, நியூஸ்18க்கு கூறியபோது, தனக்கு டைரி எழுதும் பழக்கமே இல்லை என்று தெரிவித்தார்.

*தேனி: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு. சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்துள்ளனர்.

*கோவை: போலி கிரெடிட் கார்டு தயார் செய்து போலந்து நாட்டைச் சேர்ந்தவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ2.40 லட்சம் கொள்ளை. கொள்ளையடித்த கார்த்திகேயன் என்ற நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபின் சிறையில் அடைப்பு. சைபர் க்ரைம் போலீசார் நடவடிக்கை.