full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஃபாரின் சரக்கு – Movie Review

குஜராத் மாநில அமைச்சர் ஒருவரின் மகன் ரகசியமாக தமிழகத்துக்கு வருகிறார். அவரை தமிழக அமைச்சர் ஒருவரின் பொறுப்பில் 10 நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க ஏற்பாடு நடக்கிறது. இதன் பொறுப்பை மகாலிங்கம் என்ற நபரின் தலைமையிலான ஒரு ரவுடி கும்பலிடம் ஒப்படைக்கப்படுகிறது. மறுபுரம் அந்த அமைச்சரின் மகனை தேடி கண்டுபிடிப்பதில் சில குழுக்கள் ஈடுபடுகிறார்கள். அந்த குஜராத் அமைச்சரின் மகன் எதற்காக தமிழகத்திற்கு வருகிறார்? அவர் எதற்காக ரகசியமாக தங்க வைக்கப்படுகிறார்? அந்த ரவுடி கும்பலிடம் அவர் சிக்கிகொண்டாரா? என்பதே படத்தின் மீதி கதை.

Foreign Sarakku Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News & Videos | eTimes

படத்தில் நடித்திருக்கும் அனைவரும் புதுமுகம் என்பதால் சற்று கதாப்பாத்திரத்தை நினைவு கூறுவது கடினமாகவுள்ளது. கதைகளமும் திரைக்கதையும் சற்று விறுவிறுப்பாக உள்ளதால் இயக்குனர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமிக்கு பாராட்டுகள் கிடைக்கிறது.இன்னும் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம் என்று சில இடங்களில் தோன்றவைக்கிறது. ’ஃபாரின் சரக்கு’ என்ற தலைப்பு வைத்திருந்தாலும் படத்தில் மது அருந்துவது அல்லது புகை பிடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்திருப்பது பாராட்ட வைத்திருக்கிறது.Foreign Sarakku - Movie Gallery & Movie Preview - www.mykollywood.com

படத்தின் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத், சுந்தர் ஆகியோருக்கு முதல் படம் என்றாலும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றபடி அவர்களின் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். வில்லனாக நடித்திருக்கும் மகாலிங்கம் வில்லனுக்கு உரிய பாணியில் நடிக்க முயற்சித்துள்ளார். படத்தில் நடித்த அனைவரும் புதுமுகம் என்பதால் கதாப்பாத்திரங்களை நினைவில் வைத்திருப்பது பார்வையாளர்களுக்கு சற்று கடினமாக உள்ளது. கதாநாயகிகளாக நடித்திருக்கும் அஃப்ரினா, ஹரினி, இலக்கியா ஆகியோர் அவர்களின் இயல்பான நடிப்பையும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் அதிரடியான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தின் ஒளிப்பதிவு சற்று பலம் சேத்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் சிவநாத் ராஜன் அவருடைய பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார். கதைக்கு ஏற்றபடி ஒளிப்பதிவாளர் பயணித்திருந்தாலும், இரவு காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் கூடுதல் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.பிரவீன் ராஜின் இசை படத்தின் நீரோட்டத்தில் பயணிக்க வைத்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் வரும் பிண்ணனி இசை சற்று கவனிக்கும் படி அமைத்திருக்கிறார்.