விஜய் டிவி புகழ் டிடி பேசும்போது, “ஜீவாவும் நானும் இந்த படத்தில் ட்வின்ஸ் போல நடித்துள்ளோம். ஜெய் வந்து எனக்கு தம்பி மாதிரி. படப்பிடிப்பில் அவரை மிட்டாய் மாமா என்று தான் கூப்பிடுவோம். நிஜத்தில் சுந்தர் சி சார் எப்படி எல்லாருடைய குறை நிறைகளை கேட்டு அனைவரையும் ஒன்றிணைத்து அரவணைத்துச் செல்வாரோ அதேபோல தான் இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரமும். இந்த கதாபாத்திரத்தில் நான் சரியாக இருப்பேன் என அவர் நம்பியது என்னுடைய அதிர்ஷ்டம்” என்று கூறினார்.
இயக்குனர் சுந்தர்.சியுடன் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே அவருடன் நண்பராக பயணித்து வரும் நடிகர் விச்சு என்கிற விஸ்வநாதன் பேசும்போது, ‘இதுவரை 170 படங்களில் நான் நடித்துள்ளேன். அதில் சுந்தர் சியுடன் இணைந்து பணியாற்றும் 35 படம் இது என்றார்.
நடிகை ரைசா வில்சன் பேசும்போது, “இந்த படத்தின் படப்பிடிப்பில் யாராவது ஒருவர் காமெடி செய்து கொண்டே இருப்பார்கள். படப்பிடிப்பில் நடிக்கும்போது கூட சிரிக்காமல் நடிப்பது ரொம்பவே கஷ்டமாக இருந்தது” என்றார்.
நடிகர் ஜீவா பேசும்போது, “சுந்தர் சி சார் படத்தில் நடிக்கும்போது முதல் நாளே நமது டென்சனை குறைத்து விடுவார். எப்படியிருந்தாலும் 45 நாட்களுக்குள் படத்தை முடித்துவிட வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்படுவார். அவரது படப்பிடிப்பிற்கு சென்று திரும்பும்போது 100% சந்தோஷத்துடன் திரும்புவோம். எல்லோரும் அழகாக ஒன்றிணைந்து நடித்தாலும் எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டி இருந்து கொண்டுதான் இருந்தது. எனக்கு நிஜத்தில் சகோதரி இல்லை. ஆனால் அப்படி இருப்பது போல நினைத்துக்கொண்டு படத்தில் நடிப்பது ரொம்பவே கஷ்டம். ஆனாலும் அதை சரியாக செய்துள்ளேன்” என்றார்.