தோனியின் ரூமுக்கு சென்று சி.எஸ்.கே. மேட்ச் பார்த்த சாந்தனு

Special Articles

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்தவர் பாக்யராஜ், அவரது மகன் சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.

நடிப்பை தாண்டி நடிகர் சாந்தனுவுக்கு கிரிக்கெட் மீதும் ஆர்வம் அதிகம். தீவிர கிரிக்கெட் ரசிகரான சாந்தனுவுக்கு ஐ.பி.எல்.லில் மிகவும் பிடித்த அணி சென்னை சூப்பர் கிங்ஸ் தான். குறிப்பாக அவர் தோனியின் வெறித்தனமான ரசிகராம்.

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதன் முதல் ஆட்டத்தில் சென்னை – மும்பை அணிகள் மோதின, இதில் சென்னை அணி அசத்தல் வெற்றி பெற்றது. நடிகர் சாந்தனுவும் அவரது மனைவி கீர்த்தியும் இந்த போட்டியை தோனியின் ரூமில் கண்டு களித்தார்களாம்.

ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெறும் போது சிஎஸ்கே வீரர்கள் பிரபல நட்சத்திர ஓட்டலில் தான் தங்குவார்கள். அந்த ஓட்டலில் தோனி தங்கும் அறையை புக் செய்து அங்குள்ள டிவியில் சென்னை அணியின் முதல் போட்டியை சாந்தனுவும், கீர்த்தியும் கண்டுகளித்துள்ளனர்.