குட் பேட் அக்லி – திரை விமர்சனம்
இந்திய சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்த்து இருந்த படம் குட் பேட் அக்லி இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்று பார்ப்போம்.
ஆதிக ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் சிம்ரன் திரிஷா பிரசன்னா அர்ஜுன் தாஸ் சுனில் ஜாக்கிஷராப் மற்றும் பலர் நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி
தன் மகன் எதிர்காலத்திற்காக மனைவியின் கட்டளை படி சிறைக்கு செல்லும் கேங்ஸ்டர் அஜித் 17 வருடங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வரும் அஜித் அந்த நேரத்தில் அஜித் மகன் சிறைக்கு செல்கிறார். அவர் ஏன் சிறைக்கு செல்கிறார் எதற்காக சிறை சிறைக்கு செல்கிறார் யாரால் சிறக்க செல்கிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
இதுவரை நாம் தமிழ் சினிமாவில் பார்க்காத ஒரு வித்தியாசமான அழகான இளமையான புதுமையான ரசனையான ஒரு அஜித்தை நாம் இந்த திரைப்படத்தில் காணலாம்
காட்சிக்கு காட்சி ரசிகர்களை சொல்ல வைத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும் இளமை திரும்புதே என்று சொல்வது போல அஜித்தின் நிலைமை இந்த படத்தில் விளையாடுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் நம்மளை சுண்டி இழுக்க வைத்திருக்கிறார் அதே நேரத்தில் உணர்ச்சிகரமான காட்சிகளில் நம்மை நெகிழவும் வைக்கிறார் தன் மகன் கைது ஆகி விட்டான் என்ற கட்சியில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும் அதேபோல பல இடங்களில் நகைச்சுவையில் விளையாடி இருக்கிறார். பல நடிகர்களுக்கு இந்த படத்தில் அஜித் சவால் விட்டு இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் அஜித்தின் இந்த படம் இன்றும் பல ஆண்டுகளுக்கு பேசக்கூடிய ஒரு படமாகத்தான் இந்த குட் பேட் அக்லி அமைந்துள்ளது.
படத்தின் இரண்டாம் பாகத்தில் அஜித்தின் வரலாறு சொல்லும் போது திரையரங்கு அதிர்கறது. வானத்தைப் பிளக்கும் அளவிற்கு ஒரு அதிர்வை ஏற்படுத்துகின்றனர் அஜித் ரசிகர்கள் திரையரங்குகளில் அஜித் ஒவ்வொரு காட்சிகளையும் கொண்டாட வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் இந்த கொண்டாட்டத்திற்கு இன்னொரு முக்கிய காரணம் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.
படத்தின் இன்னொரு பலம் என்று சொன்னால் அது அர்ஜுன் தாஸ் அஜித்திற்கு சவால் விட்டு இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் அற்புதமான நடிப்பின் மூலம் ரசிகர்களை மிரட்டி இருக்கிறார்.
படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் பிரபு ஜாக்கிசரஃப் பிரசன்னா சிம்ரன் அனைவரும் அவரவர்கள் பங்கை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள் சிம்ரன் அஜித் காம்பினேஷன் மீண்டும் வாலி படத்தை ரீ கிரியட் செய்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
இயக்குனர் ஆதிக்க ரவிச்சந்திரன் அஜித் ரசிகர் என்பதை மிக அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் காட்சிக்கு காட்சி ரசித்து ரசித்து ஒவ்வொரு காட்சியும் செதுக்கி வைத்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் அவரின் கற்பனையில் அஜித்தை எப்படி எல்லாம் காண்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததோ அப்படி எல்லாம் அதை வெளிப்படுத்தி இருக்கிறார் அஜித் அவர்களுக்கு இது மாதிரி ஒரு படம் மீண்டும் கிடைக்க எவ்வளவு காலம் எடுக்கும் என்று தெரியவில்லை அந்த அளவுக்கு ஒரு சிறப்பான திரைப்படத்தை ஆதிக்க ரவிச்சந்திரன் அஜத் அவர்களுக்கு கொடுத்திருக்கிறார் நிச்சயம் இந்த படம் அஜித் ரசிகர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு சினிமா ரசிகர்களையும் கவரக்கூடிய ஒரு படமாக தான் அமைந்திருக்கிறது. அஜித் நடித்த பல படங்களில் இரந்து காட்சிகளை ரீக்கிரியேட் செய்திருக்கிறார் அதேபோல படத்திற்கு தேவையான பல இடங்களில் பாடல்களின் பழைய பாடல்களை பின்னணிசையாக கொடுத்து ரசிகர்களை கவர்ந்து இழுத்திருக்கிறார்.
ஜிவி பிரகாஷ் இசை பாடல்களும் சரி பின்னணி செய்யும் சரி படத்திற்கு மிகப்பெரிய பலமாகத்தான் அமைந்திருக்கிறது.