நாங்கள் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள் : கோபி நயினார்

News
0
(0)

இயக்குநர் பா ரஞ்சித் அறம் படம் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், “அறம் வென்றது பெரும் மகிழ்ச்சி…#கற்பிஒன்றுசேர்போராடு இயக்குனர் & படக்குழுவினர்க்கும் #தோழர்நயன்தாரா அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்” என்று டுவிட்டரில் பதிவிட்டார். அவரது வாழ்த்து பதிவில் அறம் பட இயக்குநர் கோபி நயினார் பெயர் இடம்பெறாதது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது.

இந்நிலையில் கோபி நயினார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “இயக்குனர் ரஞ்சித் அவர்களும், நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள்.

ஆனால் சில நலம் விரும்பிகள் அன்பின் மிகுதியால் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இது ஆரோக்கியமான
சூழலல்ல.

தோழர்களே! படைப்பிற்கான விமர்சனங்களை வரவேற்கிறேன். நானும், இயக்குனர் ரஞ்சித்தும் இந்த சமூகத்தில் செய்ய வேண்டிய வேலைகளும், கடமைகளும் ஏராளம் இருக்கிறது. அதில் குறிப்பாக நாங்கள் இருவரும் ஒருமித்து செயல்பட வேண்டிய கட்டாயமும் கூட.

அப்போது தான் இந்த பலம் எல்லோரையும் ஒருங்கிணைப்பதற்கான காரணமாக அமைய கூடும். ஆதலால் உறவுகளை சிக்கல் ஆக்குகின்ற எந்தவொரு பதிவுகளையும் நான் அனுமதிக்க மாட்டேன். நலம் விரும்பிகளின் பதிவுகள் யாருக்கேனும் மனவருத்தத்தைத் தந்திருந்தால் அவர்களுக்கு வருத்தத்தை
தெரிவித்து கொள்கிறேன். தோழமையுடன் கோபி நயினார்.” என்று தெரிவித்துள்ளார்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.