full screen background image
Search
Friday 22 November 2024
  • :
  • :
Latest Update

அரசு பள்ளிகள் தேர்ச்சி விகிதம்: கன்னியாகுமரி மாவட்டம் முதலிடம், விருதுநகர் 2-வது இடம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் அதிகளவு தேர்ச்சி பெற்ற மாவட்டம் கன்னியாகுமரியாகும்.

இங்கு 131 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 5113 மாணவ- மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதில் 5000 பேர் தேர்ச்சி பெற்றனர். 81 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது. 2-வது இடத்தை விருதுநகர் மாவட்டம் பெற்றுள்ளது. 10263 பேர் தேர்வு எழுதியதில் 10026 பேர் வெற்றி பெற்றனர். இங்கு 104 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது.

3-வது இடத்தை பின்தங்கிய மாவட்டம் என்று கூறப்படும் ராமநாதபுரம் மாவட்டம் பெற்றது. 6641 பேர் தேர்வு எழுதியதில் 6482 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97.61 சதவீதமாகும். 83 அரசு பள்ளிகளில் தேர்வு எழுதிய அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. 22 ஆயிரத்து 145 பேர் தேர்வு எழுதியதில் 20 ஆயிரத்து 92 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 90.73 சதவீத தேர்ச்சியாகும்.

318 அரசு பள்ளிகளில் 61 பள்ளிகள்தான் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

சென்னை மாவட்டம் 91.41 சதவீதம் பெற்றுள்ளது. 3016 பேர் தேர்வு எழுதியதில் 2757 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 28 அரசு பள்ளிகளில் 3 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது.