தாத்தாவின் வாழ்க்கையைப் படமாக்கும் இயக்குநர்

News

நடிப்பு மட்டுமின்றி அரசியல், சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். இவரது நடிப்புத் திறமையை பார்த்து வியந்த பெரியார், அவரை `நடிகவேள்’ என்று அழைத்தார். நாடகத்துறையில் இருந்து சினிமாவில் நுழைந்து வில்லன், காமெடி, நாயகன் என பல்வேறு கதாபாத்திரங்களில் கலக்கிய எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை படமாக உருவாக இருக்கிறது.

கடந்த ஆண்டு ஜீவாவை வைத்து `சங்கிலி புங்கிலி கதவ தொற’ என்ற படத்தை இயக்கிய எம்.ஆர்.ராதாவின் பேரன் ஐக், தனது அடுத்த படமாக எம்.ஆர்.ராதா வாழ்க்கை படத்தை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ஐக் அவரது டுவிட்டர் பக்கத்தில், “அவரைப் பார்க்காதவர்கள் கூட அவரை மறந்திருக்க முடியாது. இது அவர்களுக்கானது தான். என்னுடைய தாத்தா ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா பற்றி இதுவரை சொல்லப்படாத கதையை படமாக எடுக்கிறேன். பேரனாக மட்டுமின்றி, ரசிகனாகவும் இந்தப் படத்தை உண்மையாக முழுமனதுடன் எடுப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.