full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஜிஎஸ்டி- யால்  விலை குறையும் அதிகரிக்கும் பொருட்கள் முழு பட்டியல்

நாடு முழுவதும் ஒரே வரி விதிக்கும் முறையான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை மத்திய அரசு நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தியது. இதனால் பல்வேறு பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 1,211 பொருட்களுக்கு வரி விகிதத்தை ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி செய்துள்ளது. பெரும்பான்மையான பொருட்களுக்கு 18 சதவீத வரி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பொருட்கள் விலை உயரும். எந்த பொருட்கள் விலை குறையும் என்று பொது மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. ஆனாலும் பெரும்பாலான கடைகளில் பழைய விலைக்கே இன்று பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது.

விலை குறையும் பொருட்கள்

பால்பவுடர், தயிர், மோர்
பிராண்ட் அல்லாத இயற்கை தேன், பாலாடைக் கட்டி
நறுமணப் பொருட்கள், தேயிலை, கோதுமை, அரிசி
கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், பாமாயில், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய்
சர்க்கரை, வெல்லம், பாஸ்தா மாக்ரோனி நூடுல்ஸ் பழங்கள் மற்றும் காய்கறிகள்
ஊறுகாய், ஜாம், சாஸ் வகைகள் இனிப்பு வகைகள்
இன்ஸ்டண்ட், உணவு மிக்ஸர், ஐஸ், மினரல் வாட்டர்
முந்திரி, பிஸ்கட், பேக்கிங் பவுடர்.
குளியல் சோப், தலைக்கு தடவக்கூடிய எண்ணெய்
சோப்புத் தூள், சோப்
டிஸ்யூ பேப்பர்ஸ், நாப்கின்ஸ்
மெழுகுவர்த்திகள், மண்ணெண்ணெய், எல்பிஜி டொமஸ்டிக், தீப்பெட்டிகள், ஸ்பூன்கள் மற்றும் போர்க் அகர்பத்திகள்
பற்பசை மற்றும் பற்பொடி
எல்பிஜி ஸ்டவ்
ஸ்டேஷனரி பொருட்கள்
நோட்டு புத்தகம், பேனா
அனைத்து வகையான பேப்பர் கிராப் பேப்பர் பள்ளி புத்தகப்பை படம்
ஓவியம், வண்ணம் தீட்டும் புத்தகங்கள், கார்பன் பேப்பர், பிரிண்டர்ஸ்.
இன்சுலின்
எக்ஸ்ரே பிலிம் மருத்துவப் பரிசோதனை பொருட்கள்
கண்ணாடிகள்
சர்க்கரை மற்றும் புற்றுநோய்க்கான மருந்துகள்
ஆடை சம்பந்தப்பட்ட பொருட்கள்
பட்டு, கம்பளி பொருள், காதி துணிகள், ரூ.500க்கும் கீழ் உள்ள காலணிகள், ரூ.1,000 வரை உள்ள ஆடைகள்
மற்றவை
15 ஹெச்பிக்கும் குறைவான திறன் உள்ள டீசல், இன்ஜின் டிராக்டர் எடை மெஷின்கள்
எலெக்ட்ரிக் டிரான்பார்மர்ஸ், வைண்டிங் வொயர்ஸ், ஹெல்மட் பட்டாசுகள்
இரு சக்கர வாகனங்கள், சொகுசு கார்கள், ஸ்கூட்டர்ஸ்
எகானாமி பிரிவு விமான டிக்கெட்டுகள்
ரூ.7,500 க்கும் குறைவான அறை வாடகை கொண்ட ஹோட்டல்கள்
சிமெண்ட், செங்கற்கள்

விலை மாறாதவை

பால்
காய்கறிகள் மற்றும் பழங்கள்
ரொட்டி
பாஸ்மதி அரிசி
அட்டா
பழச்சாறுகள்
மின்சாரம்
விலை உயரும் பொருட்கள்

பன்னீர், காபி, மசாலா பவுடர் ,நெய்
சுவிங்கம், ஐஸ் கிரீம், சாக்லெட், தங்கம்
7500 ரூபாய்க்கு மேல் இருக்கும் ஓட்டல் அறை, ஐந்து நட்சத்திர ஓட்டல்
100 ரூபாய்க்கு மேல் இருக்கும் டிக்கெட் கட்டணம்
ஐபிஎல் போட்டிகள் 1000 ரூபாய்க்கு மேல் இருக்கும் ஆடைகள்
ஷாம்பு, வாசனை திரவியம்
முதல் வகுப்பு மற்றும் ஏசி வகுப்பு டிக்கெட்கள், ஏசி, குளிர்சாதன பெட்டி
வாஷிங் மெஷின், தொலைக்காட்சி பெட்டி
கொரியர் சேவைகள், மொபைல் கட்டணங்கள்
வங்கி சேவைகள், பிராட்பேண்ட்கிரெடிட் கார்டு கட்டணம்
350 சிசிக்கும் மேலான இரு சக்கர வாகனம், சிறிய மற்றும் நடுத்தர கார்
ஸ்மார்ட்போன், லேப்டாப், டெஸ்க்டாப்
உடற்பயிற்சி சாதனங்கள்
காற்றடைக்கப்பட்ட பானங்கள், சிகரெட், புகையிலை, மதுபானம்
சொகுசு பொருட்கள்.