full screen background image
Search
Friday 8 November 2024
  • :
  • :
Latest Update

தியேட்டர்களை திறப்பதற்கான வழிகாட்டுதல் – மத்திய அரசு விளக்கம்

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது முதல் தியேட்டர்களும் நாடு முழுவதும் மூடப்பட்டன. ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், வரும் 15 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, தியேட்டர்களை திறப்பதற்கான வழிகாட்டுதல்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளன

மத்திய அரசு வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளதாவது: ”திரையரங்கு முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். ஒரு காட்சி முடிந்து அடுத்த காட்சி தொடங்கும் முன்பாக முழுமையாக கிருமி நீக்கம் செய்ய வேண்டும். ஒரு இருக்கை இடைவெளி விட்டு அமர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்களை மட்டுமே விற்க வேண்டும். ஆன்லைன் டிக்கெட் விற்பனையை ஊக்குவிக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.