full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

குணா மறுவெளியீட்டுக்கு எதிராக கியூப் நிறுவனம் – நடவடிக்கைக்கு தயாராகும் பிரமிட் குரூப்.

குணா மறுவெளியீட்டுக்கு எதிராக கியூப் நிறுவனம் – நடவடிக்கைக்கு தயாராகும் பிரமிட் குரூப்.

சினிமா பிலிம் வடிவத்தில் திரையிடப்பட்ட போது தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தனர். பிலிம் வடிவத்தில் இருந்து டிஜிட்டல் வடிவத்தில் திரையரங்குகளில் படங்கள் திரையிட தொடங்கிய பின்பு அந்தப்படத்தின் முதலீட்டில் எந்த சம்பந்தமும் இல்லாத டிஜிட்டல் நிறுவனங்கள் அதிகாரம் செலுத்த தொடங்கின. படத்தின் மூலப்பிரதி தயாரிப்பாளர்களிடம் இருந்தாலும் அதனை தனது டிஜிட்டல் சேமிப்பகத்தில் வைத்திருக்கும் கியூப், சோனி, டிஸ்ஆர் போன்ற நிறுவனங்கள் மூலமே திரையரங்குகளில் படத்தை திரையிட முடியும். இதனால் கியூப் நிறுவனத்திடம் முதலாளியின் உத்தரவுக்கு காத்திருக்கும் வேலையாள் நிலைமைக்கு பட முதலாளிகள், படத்தின் நெகட்டிவ் உரிமை வைத்திருப்பவர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர். அப்படியொரு நிலைமை நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான குணா படத்தின் திரையரங்க உரிமை வைத்திருக்கும் பிரமிட் குரூப் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கியூப் டிஜிட்டல் நிறுவனத்திற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் முயற்சியை பிரமிட் குரூப் நிறுவனம் மேற்கொண்டுள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ளது.
சாமி வரம் கொடுத்தாலும் பூஜாரி வரம் கொடுக்க விட மாட்டாரு என்பது கிராமங்களில் தினந்தோறும் பேசப்படும் பழமொழிகளில் ஒன்று. அது போன்றதொரு நிலைமை நடிகர் கமலஹாசன் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான குணா படத்தை மறுவெளியீடு செய்யும் பிரமிட் குரூப் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளில் டிஜிட்டல் மூலம் திரைப்படங்களை திரையிடும் தொழில்நுட்ப வசதியை கொண்டுள்ள கியூப் நிறுவனத்தால் குணா படத்தை பிரமிட் குரூப் திட்டமிட்ட அடிப்படையில் சூன் 21 ஆம் தேதி வெளியிட முடியவில்லை என்கின்றனர் தமிழ்சினிமா
வ ட்டாரத்தில்.

நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பிய கன்சிராம் என்பவர் அதற்கான ஆவணத்தை வழங்கவில்லை. தங்களது சங்க உறுப்பினர் என்பதற்காக சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கம் கியூப் நிறுவனத்திற்கு குணா படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தங்கள் உரிமையை உறுதிப்படுத்தவும், ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் சம்பந்தமில் லால் காரணங்களை கூறி குணா படத்தின் மறு வெளியீட்டை தடுத்து வரும் கியூப் நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் முயற்சியை பிரமிட் குருப் தொடங்கியுள்ளது.