ஜி.வி.பிரகாஷ் அரசிடம் வைத்த கோரிக்கை!

News

சமீபத்தில் தமிழகத்தை தாக்கிய “ஓக்கி” புயலில் பாதிக்கப்பட்டு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் மாயமாகினர். நடுக்கடலில் தத்தளித்த மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தி கன்னியாகுமரியில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடந்து வருகிறது.

அங்கு நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் அரசிற்கு கோரிக்கை ஒன்று விடுத்துள்ளார். அதில்,

“நம் தமிழ் மீனவர்களுக்கு GPS, Radar, Satellite phone போன்ற கருவிகள் மானியத்திலும் தவனை முறையிலும் அரசு வழங்க வேண்டும்.
இதை பொருத்துவது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசிடம் சிரம் தாழ்த்தி கேட்டுக்கொள்கிறேன். இதில் அனைத்து மீனவ கூட்டமைப்புகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.