full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் : கமல்ஹாசன்

ஆழ்வார் பேட்டை இல்லத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் செய்தியாளர் சந்திப்பு:

 

பெரியார் பற்றிய ஹெச்.ராஜாவின் கூற்று கீழ்த்தரமானது. அதனை சட்ட ரீதியான தண்டிக்க முடிந்தால் தண்டிக்க வேண்டும்.
பெரியாரை ஒன்றும் செய்திட முடியாது அவரது உயரம் அவ்வளவு அதிகம்.
பெரியார் சிலைக்கு பாதுகாப்பு தேவை இல்லை.
அவரைப் பற்றி பேசுபவர்களுக்கு வேண்டுமானால் பாதுகாப்பு தேவைப்படலாம்.

இது காவிரி மேலாண்மை அமைப்பதை திசை திருப்பும் செயல்.
நாம் திரும்பிடாமல் பாதுக்காக்க வேண்டும். நமக்க கலகங்கள் தேவை இல்லை தீர்வுகள் தேவை.

ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பதுதான் நேர்மையான கட்சி செய்யக் கூடிய வேலை.

 ஹெச்.ராஜா வருத்தம் தெரிவித்தது போதாது. மன்னிப்பு கேட்டாலும் ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்பதையும் யோசிக்க வேண்டும்.

அட்மின் போஸ்ட் செய்ததாக கூறுவது நொண்டிச் சாக்கு. அதை ஏற்க முடியாது.

அரசு அனுப்பி இருக்கும் நோட்டீஸில் என் மீது குற்றம் இருக்குமானல் சட்டத்திற்கு கட்டுப்படுவேன். நான் மட்டுமல்ல அப்பகுதியில் 7 ஆயிரம் வீடுகள் கட்டி உள்ளனர்.