full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மேலும் மேலும் பிரம்மாண்டமாகும் ஹன்ஷிகாவின் புதிய படம்!!

“மசாலா படம்”, “ரோமியோ ஜூலியட்” மற்றும் “போகன்” போன்ற திரைப்படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார் U.R.ஜமீல். அந்த நட்பின் அடிப்படையிலும், நம்பிக்கையின் அடிப்படையிலும் ஜமீல் சொன்ன கதைக்கு உடனே நடிப்பதற்கு ஓ.கே சொல்லி இருக்கிறார் நடிகை ஹன்ஷிகா மோத்வானி.

அதே போல, சமீப காலமாக தனி முத்திரை பதித்து வரும் இசையமைப்பாளர் ஜிப்ரானும் இந்தப் படத்தின் கதைக்காக உடனே சம்மதம் சொல்லி இருக்கிறார். இந்த இரண்டு பிரபலங்களும் தன் படத்தில் அமைந்ததை மகிழ்வுடன் விவரிக்கிறார் ஜமீல்,

“அது ஒரு அசாதாரணமான ஆச்சரியம். ஜிப்ரான் சார் ஏற்கனவே மிகப்பெரிய படங்களில் இசையமைப்பாளராக இருப்பதால், என் படத்துக்கு இசையமைப்பாரா? என்று சந்தேகித்தேன். பாடல்களை விட, படத்தின் பின்னணி இசை ஸ்கிரிப்டுக்கு எந்த அளவு முக்கியம் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளார். என் கதை அவருக்கு பிடித்து போனது மகிழ்ச்சியளிக்கிறது. அவருடன் பணிபுரியும் சிறந்த அனுபவத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்” என்றார்.

ஹன்சிகா மோத்வானியின் அழகும், நடிப்பும்.. அழுத்தமான கதை மற்றும் ஜிப்ரானின் துடிப்பான இசை இம்மூன்றும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை இயல்பாகவே அதிகரித்திருக்கிறது. “ஜியோஸ்டார் எண்டர்பிரைஸ்” நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எம். கோடீஸ்வர ராஜு இப்படத்தைத் தயாரிக்கிறார். மேலும், இப்படத்தை மேலும் பிரம்மாண்டமாக்கும் முயற்சியில் சில முக்கிய தொழில் நுட்ப கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.