” திருவள்ளூவராக நடிக்கும் ஹர்பஜன் சிங் ”

News
0
(0)

திருவள்ளூவராக நடிக்கும் ஹர்பஜன் சிங்

 

மாணவர்களுக்கான பிரச்சனைகள் குறித்து திரைப்படம் மூலம் பதிவு செய்ய இருக்கிறார்கள் பிளாக் ஷீப்

தற்போதுள்ள இணைய உலகில் இளைஞர்களின் விருப்ப யூடியூப் சேனலாக இருப்பது பிளாக் ஷீப். ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த் உள்பட பல கலைஞர்களான இளைஞர்கள் அந்தச் சேனலை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

எல்லாருக்கும் நல்லாருக்கும் என்ற வாக்கியத்தோடு பிளாக் ஷீப் குழு தனது புதிய பயணத்தைத் துவங்கியுள்ளது. புதிதாக 6+1 நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் அறிமுகப்படுத்தியது. இதன் துவக்கவிழா சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பிளாக் ஷீப் தளத்தில் வெற்றிகரமாக இயங்கி வரும் நிகழ்ச்சிகளின் பங்கேற்பாளர்களை அழைத்து அறிமுகப்படுத்தி அசத்தினார்கள். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலைப்புலி தாணு, இயக்குநர்கள் சேரன், விஜய் சந்தர், அரசியல்வாதியும் நடிகருமான நாஞ்சில் சம்பத், நடிகர் ரியோ, நடிகரும் டாக்டருமான சேதுராமன், தொலைக்காட்சி புகழ் கோபிநாத், அசார் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு வாழ்த்தினார்கள்.

பிளாக் ஷீப்பின் அடுத்த 6+1 பற்றிய அறிவிப்புகள்….
1. திருக்குறள் கன்சல்டன்சி சர்வீசஸ் :- சிஎஸ்கே அணியில் சுழர்பந்து வீச்சாளராக இருக்கும் ஹர்பஜன் சிங் திருவள்ளூவராக நடிக்கும் வலைத் தொடர் ஒன்றை DUDE விக்கியின் இயக்கத்தில் தயாரிக்க உள்ளது. இந்த வலைத்தொடரின் 12 பகுதிகளை கொண்ட முதல் சீசன் வரும் பிப்ரவரி 2, 2020 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.

2. பிளாக் ஷீப் டிஜிட்டல் விருதுகள் :- தமிழ் டிஜிட்டல் தளத்தில் இயக்கும் திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தனித்துவமான விருதினை வழங்கி கௌரவப்படுத்திட விருது வழங்கும் விழா நடத்த இருக்கிறார்கள்.

3. பிளாக் ஷீப் வேல்யூ :- பிளாக் ஷீப்பின் புத்தம் புதிய நிகழ்ச்சிகளை பிளாக் ஷீப் வேல்யூவில் பார்த்து ரசிக்கலாம். பிளாக் ஷீப் ஓடிடி (Black Sheep OTT) என்று சொல்லப்படும் தனி ஆப்-பை அறிமுகப்படுத்தினார்கள்.
4. பிளாக் ஷீப் F3 :- ஜனவரி 5 2020 F 3 (FACES FOR THE FUTURE) என்ற பெயரில் மாநில அளவிலான கல்லூரி திறமைத் திருவிழாவை நடத்தி அதில் வெற்றி பெறுவோருக்கு பிளாக் ஷீப்பில் இணையும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

5. பிளாக் ஷீப் ரீவேம்ப் :- ஜனவரி 2, 2020 ம் தேதி முதல் மேலும் பல புதிய நிகழ்ச்சிகளுடன், மேன்படுத்தப்பட்ட தரத்தில், பல புதுமைகளுடனும் பிரம்மாண்டத்துடனும் பயணிக்கத் தயாராகிவிட்டது பிளாக் ஷீப்.

6. ஆண்பாவம் :- ஒரு ஆண் எதிர் கொள்ளும் பொதுவான பிரச்சனைகளை வேடிக்கையான முறையில் விவாதிக்க வரும் நிகழ்ச்சிதான் ஆண் பாவம். இதில் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தின் கதாநாயகனான டாக்டர் சேதுராமன் நடிப்பில், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் தன் முத்திரியை பதித்த கார்த்திக் வேணுகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக இருக்கிறது. 12 பகுதிகளை கொண்ட இந்த தொடரின் முதல் சீசன் வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் வெளியாக இருக்கிறது.

பிளாக் ஷீப்பின் அடுத்த திரைப்படம் :-

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்த பிளாக் ஷீப், தற்போது புட் சட்னி புகழ் ராஜ்மோகன் இயக்கத்தில், தமிழ் சினிமாவில் வெற்றிகரமான விநியோகஸ்தராக தன் முத்திரையை பதித்த ராக்போர்ட் என்டர்டெயின்மெண்ட் முருகானந்தம் தயாரிப்பில், பர்ஸ்ட் காபி அடிப்படையில், பிளாக் ஷீப் புரொடக்‌ஷன்ஸ் மூலம் புதிய படம் தயாரிக்க இருக்கிறார்கள்.

இந்த திரைப்படம் தற்கால பள்ளி மாணவர்களின் வாழ்க்கை, தேவை, ரசனை, மகிழ்ச்சி, கொண்டாட்டம், காதல், நட்பு மற்றும் இன்றைய சூழலில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் பதிவு செய்ய இருக்கிறார்கள். ஒட்டு மொத்த பிளாக் ஷீப் நட்சத்திரங்களும் நடிக்க, பிளாக் ஷீப் அயாசும், மைக் செட் ஸ்ரீராமும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இத்திரைப்படம் கோடை விடுமுறையை குறிவைத்து வெள்ளித்திரைக்கு தயாராகிறது.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.