நோயை பரப்பியவர்தான் அம்பேத்கர் – ஹர்திக் பாண்டியா

General News

அம்பேத்கர் குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா மோசமாக டிவிட் செய்து இருக்கிறார். இந்த டிவிட் பெரிய பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது.

அம்பேத்கர் மோசமான சட்ட முறையை உருவாக்கி இருக்கிறார் என்று கூறியுள்ளார். மேலும் இந்திய சட்ட அமைப்பையும் அவர் கிண்டல் செய்துள்ளார். சமூக நீதிக்கு எதிரான அவரது டிவிட் காரணமாக தற்போது அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

இவர் தனது டிவிட்டில் ”அம்பேத்கர் யார்? மோசமான சட்டத்தையும், அரசியலமைப்பையும் உருவாக்கியவர். அவர் இடஒதுக்கீடு என்னும் நோயை நாடு முழுக்க பரப்பியவர்தானே” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நிலையில் பாண்டிய அந்த டிவிட்டை நீக்கிவிட்டார்.

இந்த டிவிட் பெரிய அளவில் பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது. அவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ” படிக்காத நபர் போல டிவிட் செய்யாதீர்கள் பாண்டியா. அம்பேத்கார் ஒரு வக்கீல், பொருளாதார நிபுணர், அரசியல்வாதி, சமூக சீர்திருத்தவாதி, சமூக கொடுமைகளுக்கு எதிராக போராடியவர், பெண்களுக்காகவும் பணியாளர்களுக்காகவும் குரல் கொடுத்தவர்” என்று கோபமாக விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் சிறுபான்மையினருக்கு எதிராக பேசிய குற்றத்தின் கீழ் இவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மேக்வால் என்ற வழக்கறிஞர் இந்த வழக்கை தொடுத்துள்ளார். ராஜஸ்தான், ஜோத்பூர் காவல்நிலையத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதனால் அவர் இன்று கைது செய்யப்படலாம். இன்று மாலைக்குள் போலீஸ் இவரை கைது செய்ய வாய்ப்பு இருக்கிறது. இவர் கைது செய்யப்படும் பட்சத்தில் ஐபிஎல் போட்டிகளில் விளையாட பிரச்சனை ஏற்படும். மேலும் இவர் முன்ஜாமீனுக்கு விண்ணப்பிக்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.