காலம் வெல்லுமா? காதல் வெல்லுமா? திரையில் விடை சொல்ல வருகிறது பிரபாஸ் நடிக்கும் ராதே ஷ்யாம்

cinema news
 
பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமா கொண்டாடும் நாயகனாக உருவெடுத்திருக்கிறார் பிரபாஸ். வீரமும் சண்டைக்காட்சிகளும் நிறைந்த படங்களில் நடித்து அனைத்து இதயங்களையும் திருடிய பிரபாஸ், ஒரு அழகான காதல் கதையுடன் அதே இதயங்களை வருட வருகிறார்.ராதாகிருஷ்ணாவின் இயக்கத்தில் பூஜா ஹெக்டேவுடன் ஜோடி சேர்ந்து யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளிவரும் காதல் காவியம் ராதேஷ்யாம். 
Prabhas and Pooja Hegde's Radhe Shyam postponed: 'It looks like we will have to wait' - Hindustan Times
காலமும் காதலும் முடிவே இல்லாத ஒரு போரில் எப்போதும் சண்டையிட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக் காலத்தைக் கணிக்கும் ஒரு கவிஞன் தன் கணிப்புக்குள் சிக்காத ஒரு காதலில் விழுந்தால், அவளது அழகில் மயங்கும்போது அவன் கணிப்புகள் பொய்யாகுமா? கனவு கலையும்பொழுது கணிப்பு மெய்யாகுமா? விடையில்லாத சில கேள்விகள் எப்போதும் இந்தக் காற்றில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. 
Radhe Shyam song Aashiqui Aa Gayi teaser: Prabhas, Pooja Hegde promise a breezy, feel-good track | Entertainment News,The Indian Express
காலம் வெல்லுமா? காதல் வெல்லுமா? எனும் கேள்விக்கு வெள்ளித் திரையில் விடைகூற வருகிறது ராதே ஷ்யாம். ஜஸ்டின் பிரபாகரன் மற்றும் தமனின் மனதை உருக்கும் இசையில், மதன் கார்க்கியின் வசனம் மற்றும் பாடல்களில் ஒரு மாபெரும் வண்ணத் திரைக் கவிதையாக உருவெடுத்துள்ள இந்தத் திரைப்படம் இந்த மார்ச் 11 அன்று உலகமெங்கும் வெளியாகிறது. முந்நாள் காதலர்களுக்கும் ராதே ஷ்யாம் திரைப்படம் ஒரு மறக்கமுடியாத விருந்தாக அமையும் என்று இயக்குநர் ராதாகிருஷ்ணா சொல்கிறார்.சத்யராஜ், ஜெயராம் மற்றும் இந்தியாவின் சிறந்த நடிகர்களும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களும் இணைந்து செதுக்கிய இந்தப் படைப்பின் அழகை ஆழத்தை திரையரங்கில்தான் முழுமையாக உணரமுடியும் என்கிறார் இயக்குநர் ராதாகிருஷ்ணா.