அவர், அன்று போலவே இன்றும் : எஸ் பி முத்துராமன்

News

நடிகர் ரஜினிகாந்த், மே 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாகவும், 15-ந்தேதி முதல் தினமும் 3 மாவட்ட ரசிகர்கள் வீதம் 5 நாட்களில் 15 மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் படி, ரசிகர்களுடனான, நடிகர் ரஜினிகாந்தின் முதல் கட்ட சந்திப்பு நிகழ்ச்சி கோடம்பாக்கம் ராகவேந்திர திருமணமண்டபத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்துடன் பங்கேற்றுப் பேசிய இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், “ரஜினிகாந்த் நடிகராக மட்டும் அல்ல, நல்ல நண்பராக உள்ளார். புகழை தலையில் ஏற்றிக்கொள்ளாத அவர், கொடுத்து பழக்கப்பட்டவர். முதல் சந்திப்பில் அவரை எப்படி பார்த்தேனோ இன்றும் அப்படியே இருக்கிறார். ரஜினியின் புகைப்படத்தை வீட்டில் வைக்கும் போது, அவரைப் போலவே ஒழுக்கமாக இருக்க வேண்டும் என நினைத்து வைக்க வேண்டும்.” என்று கூறினார்.