full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

ஹிர்து ஹாரூனின் ‘முரா’ படத்திற்கு திரையரங்குகள் அதிகரிப்பு

ஹிர்து ஹாரூனின் ‘முரா’ படத்திற்கு திரையரங்குகள் அதிகரிப்பு

 

‘தக்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஹிர்து ஹாரூன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘முரா’. மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு தொடர்ந்து கிடைத்து வருவதால் இப்படத்தினை திரையிடும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

நடிகர் ஹிர்து ஹாரூன் தமிழில் ‘தக்ஸ்’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் . இதனைத் தொடர்ந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்த ‘மும்பைகார்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இந்தியிலும் அறிமுகமானார். பல சர்வதேச விருதுகளை வென்ற ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட் ‘எனும் திரைப்படத்திலும் நடித்து உலக அளவிலான கவனத்தையும் கவர்ந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ‘கப்பேலா ‘ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் முஹம்மத் முஸ்தபா இயக்கத்தில் உருவாகி, வெளியான ‘முரா ‘ திரைப்படத்தில் அனந்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் -வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் நடிகர் ஹிர்து ஹாரூன் தமிழ் மற்றும் மலையாள மொழி ரசிகர்களின் ஆதரவையும், அன்பையும் பெற்று வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார்.