Maha Movies நிறுவனத்தின் பன்மொழி படைப்பான ‘சபரி’ படத்திற்காக ஷீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்!

cinema news
Maha Movies நிறுவனத்தின் சார்பில்,  திரு.மகேந்திர நாத் கோண்ட்லா தயாரித்து அனில்காட்ஸ் இயக்கி வரும் “சபரி” படத்தில் வரலட்சுமி சரத்குமார் இதுவரை கண்டிராத புதுமையான வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை மகரிஷி கோண்ட்லா வழங்குகிறார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கும் இந்தப் படம், உகாதி தினத்தன்று வெகு சிறப்பாக துவங்கப்பட்டு , தற்போது பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் துவக்கத்தை குறிக்கும்  போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். சுவாரசியமான இந்த போஸ்டர் பார்வையாளர்களின் கவனத்தை எளிதில் கவர்ந்து ஈர்ப்பதாக, அமைந்துள்ளது.

தயாரிப்பாளர்களின் கூற்றுப்படி, சபரி  திரைப்படம் காதல் மற்றும் க்ரைம் கலந்த  புதிரான கதையாகும், மேலும் இது ஒரு தீவிரமான உளவியல் த்ரில்லர் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், சஷாங்க் சித்தம்ஷெட்டி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கோபி சுந்தரின் இசை படத்திகு  முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது.
ஹைதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் கொடைக்கானலில் உள்ள சில அழகான இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ஒளிப்பதிவாளராக நானி சமிடிசெட்டியும், கலை இயக்குநராக ஆசிஷ் தேஜா புலாலாவும், படத்தொகுப்பாளராக தர்மேந்திரா காக்கர்லால் ஆகியோர்  பணியாற்றுகின்றனர்.