ரொமான்ஸ் காமெடி ஜானரில், நடிகர் சந்தானத்தின் மைத்துனர் வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் தயாரிக்கும் புதிய திரைப்படம் !

cinema news
NN pictures சார்பில் தயாரிப்பாளர்கள் தங்கராஜ், வினோத் துரைசாமி ஆகியோரின் முதல் தயாரிப்பாக, இயக்குநர் விவேக் இயக்கத்தில், புதுமுகங்கள் நடிக்கும், ரொமான்ஸ் காமெடி திரைப்படத்தின் பூஜை சென்னையில் இனிதே நடைபெற்றது.
 
நடிகர் சந்தானத்தின் மைத்துனரான வினோத் துரைசாமி மற்றும் தங்கராஜ் அவர்கள், தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் கால்பதிக்கிறார். NN pictures சார்பில் இவர் தயாரிக்கும் “Production No 1 திரைப்படத்தின் பூஜை,  படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, PVR மீனா, Divo தலைமை அதிகாரி விசு ஆகியோருடன் 4you கம்பெனி நிறுவனர் R. பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொள்ள, சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவினை தொடந்து,  படக்குழுவினர் நடிகர் சந்தானத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். படம் குறித்த செய்திகளை கேட்டறிந்த நடிகர் சந்தானம், படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
 
தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்கள் வருவது அரிதாகிவிட்டது, அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் முழுக்க முழுக்க இளைஞர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக, ரொமான்ஸ் காமெடி ஜானரில் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இப்படம் உருவாகவுள்ளது.
நடிகர் மைக்செட் ஶ்ரீராம் இப்படம் கதை நாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாகிறார். நடிகை மானசா மற்றும் ரிமி ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். படத்தில் நடிக்கும் மற்ற முக்கிய கதாப்பாத்திரங்களுக்காக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
தற்போது இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இப்படத்தினை இயக்குநர் விவேக் எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் அருள்ராஜ் கென்னடி  இசையமைக்க, முத்து மூவேந்தர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். P.S.ராபர்ட் கலை இயக்கம் செய்கிறார். படம் குறித்த மற்ற தகவல்கள்  விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.