
மழை வரும் நேரத்தில் எல்லாம், அருகில் நிறுத்தப்பட்ட சைக்கிள் ரிக்ஷாக்களுக்குள் சென்று அமர்ந்து கொண்டிருந்ததாக தெரிவித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர் எந்த காலதுக்குமே பழைய நினைவுகளை மறந்து விட கூடாது, எனக் கூறியுள்ளார். மேலும் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது தான் படுத்துறங்கிய இடத்துக்கு வந்து உறங்கிச் செல்வதை இன்றும் வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இரவில் ஒரு 11 மணிக்கு மேல் அந்த இடத்துக்கு வரும் எஸ்.ஏ.சி அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டிற்கு சென்றுவிடுவேன் எனவும், என்னுடைய ஆரம்ப கால பிளாட்ஃபார்ம் வாழ்க்கையை நான் இன்னுமே மறக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இனிவரும் எபிசோடுகளில் இதைவிட பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகும் என்றும் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.