பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து தினசரி அப்டேட்டுகளை அவரது மகன் சரண் கொடுத்து வந்தார். ஆனால் கடந்த சில தினங்களாக எஸ்.பி.பி உடல்நிலை குறித்து சரண் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் இருந்தார். திங்கள் கிழமை நல்ல செய்தி வரும் என்று சொல்லியிருந்தார்.
கொரானா தொற்றில் இருந்து மீண்டார் #SPB !!
எஸ்.பி. சரண் விளக்கம்! #SPBalasubrahmanyam #SPBalasubramaniam #SPBCharan pic.twitter.com/fXVGVzavGJ— Cinema Paarvai TV (@cinemaparvaicom) September 7, 2020
அதன்படி, இன்று எஸ்.பி.பி.சரண் வெளியிட்டுள்ள வீடியோவில், ‘கொரோனா பரிசோதனையில் எஸ்.பி.பி.க்கு நெகட்டிவ் என வந்துள்ளது. நுரையீரல் தொற்று குணமடைந்துவருகிறது. தொடர்ந்து பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐபேடில், கிரிக்கெட், டென்னிஸ் போட்டிகளை பார்த்து வருகிறார். பேச நினைப்பதை எழுதி காண்பிக்கிறார் என்று கூறியிருக்கிறார்.