ஸ்ரீ கிருஷ்ணா பிலிம் புரொடக்ஷ்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் S.V.சூரியகாந்த் தயாரிப்பில், சித்தார்தா இணை தயாரிப்பில் சங்கர் – கென்னடி இருவரது இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத இந்த படத்தில் பழைய வண்ணாரப்பேட்டை, தீகுளிக்கும் பச்சை மரம், மணல் நகரம், மற்றும் தற்போது D 3, நினைவெல்லாம் நீயடா போன்ற படங்களில் நாயகனாக நடித்ததோடு, சின்னத்தம்பி சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரமாபலான பிரஜன் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஆஜீத் நாயக் அறிமுகமாகிறார்.கதாநாயகிகளாக பிரகயா நயன், ரஷ்மி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ராஜ்கபூர், பருத்திவீரன் சுஜாதா, ஷோபராஜ் மற்றும் இன்னும் எராளமான நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் கென்னடி கூறியதாவது..
அரசியல் கலந்த கிரைம் திரில்லர் கதை இது.தவறான அரசியல் வாதிகளின் ஆதிக்கத்தால் சாமானிய மக்கள் எப்படி பாதிக்கப் படுகிறார்கள் என்ற முக்கியமான விஷயத்தை இதில் சொல்ல இருக்கிறோம்.இணை பிரியா இரண்டு நண்பர்கள் ஒரு அரசியல் வாதியின் சூழ்ச்சியில் சிக்குகிறார்கள் அதிலிருந்து எப்படி மீண்டார்கள் இறுதியில் அவர்களது நட்பு என்னவானது எப்பது படத்தின் திரைக்கதை.நட்பின் ஆழத்தை இதுவரை யாரும் சொல்லிறாத ஒரு வித்தியாசமான கோணத்தில் சொல்கிறோம்.நிச்சயம் இந்த படம் வெளியான பிறகு படம் பார்கும் ஒவ்வொருவருக்கும் நமக்கு இப்படியொரு நட்பு கிடைக்கவில்லையே என்று நிச்சயம் ஏங்குவார்கள் என்கிறார்கள் இயக்குனர்கள் ஷங்கர் மற்றும் கென்னடி.படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஒளிப்பதிவு – வினோத் குமார்
இசை – விஜய் யாட்லீ ( இவர் இசையமைப்பாளர் A.R.ரகுமானின் இசைப் பள்ளி மாணவர். கன்னடத்தில் 7 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக களமிறங்குகிறார்.
பாடல்கள் – கென்னடி
இணை தயாரிப்பு – சித்தார்தா
தயாரிப்பு – S.V.சூரியகாந்த்
கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார்கள் – சங்கர் மற்றும் கென்னடி இருவரும்.
இந்த பட்தின் படப்பிடிப்பு இன்று தர்மபுரியில் பூஜையுடன் துவக்கியுள்ளது. தொடர்ந்து தொடர்ந்து தர்மபுரி,கன்யாகுமரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.