full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் வழங்கும், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படம் ஜூன் 2-ம் தேதி வெளியாகிறது!

ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில்,  நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில்  உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்.’ இந்த படம் உலகமெங்கும் வரும் ஜுன் 2-ம் தேதி வெளியாகிறது.
 
இப்படத்தில் முதல் முறையாக கரடுமுரடான கிராமத்து இளைஞனாக நடித்துள்ளார் ஆர்யா.  இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே ஆர்யாவின் தோற்றம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் நாயகியாக  சித்தி இதானி நடித்துள்ளார். குடும்பத்துடன் ரசிக்கும்படியான, வெற்றிகரமான கமர்ஷியல் படங்களை வழங்கும் இயக்குநர் முத்தையா முதல் முறையாக ஆர்யாவுடன் இணைந்துள்ளார்.
 
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியாக, முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வீரமணி கலை இயக்கம் செய்துள்ளார்.
 
‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படம் உலகமெங்கும் 2023 ஜீன் 2-ம் தேதி வெளியாகுமென படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.