full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

மோசடி வழக்கில் சிக்கிய ஹாலிவுட் நடிகை

பிரபல ஹாலிவுட் நடிகை லோரி லாஹ்லின். இவர் தி நியூயார்க் கிட்ஸ், சக்கர்ஸ், கிரிட்டிக்கல் மாச், பேக் டூ த பீச், சீக்ரெட் அட்மைரர், கிராள்ஸ்பேஸ் உள்ட பல ஹாலிவுட் படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை விவாகரத்து செய்து விட்டு மொஸிமோ கியானுள்ளி என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இஸபெல்லா ரோஸ், ஓலிவியா ஜேட் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கடந்த வருடம் அமெரிக்காவில் நடந்த கல்லூரி நுழைவு தேர்வில் 50 பேர் போலி ஆவணங்களை கொடுத்து தங்கள் பிள்ளைகளை சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் நடிகை லோரி லாஹ்லினும் அவரது கணவரும் சிக்கினர். வழக்கு விசாரணையில் மகளை போலி ஆவணம் மூலம் கல்லூரியில் சேர்த்ததை ஒப்புக்கொண்ட லோரி லாஸ்லின் மகள் மீது உள்ள பாசத்தினால் மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து லோரி லாஹ்லினுக்கு 2 மாத சிறை தண்டனையும் அவரது கணவருக்கு 5 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இருவருக்கும் இந்திய மதிப்பில் ரூ. 3 கோடியே 74 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பை கேட்டதும் லோரி கண்ணீர் விட்டு அழுதார்.