full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

ஒரு நல்ல கதை தனக்குரிய திறமையான நடிகர் நடிகையரை தேடிக்கொள்ளும் என்கிறார் லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.

 
 
ஜனரஞ்சகமான மசாலா சமாச்சாரங்களை மட்டுமே நம்பி எடுக்கப்படும் படங்கள் திரைக்கு வந்த சில நாட்களிலேயே  தடமில்லாமல் மறைந்து போவதை நாம் கண்டிருக்கிறோம். ஒரு சில இயக்குநர்களே தங்கள் திறமையை தடமாக பதிப்பதில் முனைப்போடு இருப்பார்கள்.  இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்களில் ஒருவர் என்றால் மிகையாகாது. விரைவில் வெளிவர இருக்கும் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் ஜனரஞ்சகமும், சிந்தனையை தூண்டும் கருத்தும் ஒருங்கே கொண்ட படமாகும். 
“ஆரோகனம்” மற்றும் “அம்மினி” ஆகிய படங்களின் மூலம் எல்லாத்தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்ற லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கி வரும் “ஹவுஸ் ஒனர்” சமிபத்தில் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
 
 
“ வார்த்தைகளே இல்லை, நான் மிகமிக மதிக்கும் சிலர் என் படத்தை பார்த்து என்னை பாராட்டுவது  மனதை நிறைய வைக்கிறது. உள்ளதை உள்ளபடி செல்லும் உள்ளங்களை மட்டும் தான், நான் இத்தகைய பிரத்தியேக காட்சிகளுக்கு அழைப்பேன். அவர்களிடம் இருந்து எனக்கு கிடைத்த பாராட்டும் மரியாதையும் அளவிட முடியாது.
 
‘ஆடுகளம்’ கிஷோர் இந்தப் படத்தில் மிரட்டியிருக்கிறார்.  பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் ம
 
கள் லவ்லின் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.  இவர் நடிப்பை பார்த்தவுடன், நடிப்புப் கூட பரம்பரை சொத்துதான் என கருத்து தோன்றும்.  எனது தோழி விஜயலக்ஷ்மியும் அவளது சகோதரி சரிதாவும் லவ்லினுடைய திறமையை எண்ணி பெருமைப்படலாம்.  ‘பசங்க’ திரைப்படத்தின் மூலமாக தேசியவிருது பெற்றவரும்,  ‘கோலிசோடா’ படத்தில் மிக பிரமாண்டமாக நடித்திருந்த கிஷோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாம் சராசரி வாழ்வில் சந்திக்கும் ஒரு அம்மாவை ஶ்ரீரஞ்சனி பிரதிபலித்திருக்கிறார். தரமான நல்ல கதைகள் திறமையான நடிகர்களை தானே தேடிக்கொள்ளும் என்பதில் எனக்கு இங்கேதான் நம்பிக்கை பிறக்கிறது. இசையமைப்பாளர் ஜிப்ரான் போன்ற கலைஞனுடன் இந்தப் படத்தில் பணியாற்றியதில் பெருமிதம் கொள்கிறேன்.  மதன் கார்க்கி மற்றும் அனுராதா பாடல் வரிகளை இயற்றியுள்ளார்.  பாடல்களுக்கு  உயிருட்டும் விதமாக சின்மயி,  சத்யபிரகாஷ் மற்றும் பென்னி தயாள் பாடியுள்ளனர்.  ‘மகளிர் மட்டும்’ புகழ் பிரேம் சிறந்த முறையில் எடிட்டிங் செய்துள்ளார்.  கிருஷ்ண சேகர் ஒளிப்பதிவாளராகவும்,  தபஸ் நாயக் ஆடியோகிராபியும் கையாண்டுள்ளனர்.  இப்படத்தை கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.  கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன,  அந்த வரிசையில்  இந்தப்படமும் வெற்றிபெறும் என நம்புகிறேன்” என்று பெருமையுடன் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் கூறுகிறார்.