full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நானும் ரஜினிகாந்த் ரசிகன் தான் : அமைச்சர் செல்லூர் ராஜூ

கடந்த 22ஆம் தேதி, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, “ரஜினிகாந்த் ஒரு வியாபாரி. இன்றைக்கு ஒன்று பேசுவார், நாளைக்கு ஒன்று பேசுவார். நடிகர்கள் பின்னால் செல்வதை மக்கள் தவிர்த்து விட்டனர். தமிழகத்தில் சிஸ்டம் எதுவும் கெட்டுப்போகவில்லை. கட்சி தொடங்கிய நடிகர்களின் நிலையை ரஜினிகாந்த் அறிவார். நடிகர்கள் களம் காணும் கட்சிகளால் பலனில்லை.” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “ரஜினிகாந்த் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை உண்டு. நானும் ரஜினி ரசிகன்தான்”. என கூறினார்.

மேலும், “ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேச ஸ்டாலினுக்குத் தகுதி இல்லை. ஸ்டாலினை சிறந்த நிர்வாகி என ரஜினிகாந்த் கூறியிருப்பது வருத்தமளிக்கிறது. ஸ்டாலின் என்றும் ஜெயலலிதா இடத்தை பிடிக்க முடியாது.” என்றும் கூறினார்