full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

நான் என் வழியில் செல்கிறேன்.நடிகை வனிதா விளக்கம்

நடிகை வனிதாவும் பீட்டர்பால் என்பவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டதும் பின்னர் பீட்டர்பால் மதுவுக்கு அடிமையானவர் என்று தகராறு செய்து வனிதா பிரிந்ததும் பரபரப்பானது. இந்த நிலையில் மீண்டும் பீட்டர்பாலுடன் சேர வனிதா முயற்சி செய்ததாகவும் ஆனால் பீட்டர்பால் அவரை ஏற்கவில்லை என்றும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதற்கு விளக்கம் அளித்து டுவிட்டரில் வனிதா கூறியிருப்பதாவது:-

நான் மீண்டும் சமரசம் செய்து கொள்ள முயன்றதாகவும் அது ஏற்கப்படவில்லை என்றும் வந்ததிகள் பரவுகின்றன. எனது வாழ்க்கையில் யாரும் என்னை நிராகரித்தது இல்லை. நான்தான் நிராகரித்து இருப்பேன். ஏற்கனவே எனது உறவுகளை சரிசெய்ய முயன்று ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் வெளியே வந்தேன். பொய்யான வாழ்க்கையை என்னால் வாழ முடியாது. எனவே கற்பனையை நிறுத்துங்கள். நான் கடைசியாக வெளியிட்ட வீடியோவுக்கு பிறகு இருவரும் பேசினோம். அவர் ஒரு முடிவை எடுத்து விட்டார். அதன்படி என்னால் வாழமுடியாது. அவரது முன்னாள் மனைவியும் குழந்தைகளும் அவர் வேண்டாம் என்று சொன்னது வியப்பாக உள்ளது. நான் காதலில் ஏமாற்றப்பட்டு இருக்கிறேன். அடுத்து எதிர்கால திட்டங்களில் கவனம் செலுத்துவேன். அவருடன் எனக்கு எந்த உறவும் இல்லை. நான் என் வழியில் செல்கிறேன்.

இவ்வாறு வனிதா கூறியுள்ளார்.