full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

“திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.- அனுஷ்கா

நடிகை அனுஷ்காவுக்கு தற்போது 38 வயது ஆகிறது. திருமண வயதை தாண்டியும் இன்னும் திருமணத்துக்கு அவர் தயாராகவில்லை. இதுகுறித்த கேள்விக்கு அனுஷ்கா அளித்த பதில் வருமாறு:

“திருமணத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. குழந்தைகளை கொஞ்சவும் ஆசைப்படுகிறேன். ஆனாலும் திருமண விஷயத்தில் எனக்கு எந்த அவசரமும் இல்லை. எவ்வளவு தாமதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை. அதிக நேரம் எடுத்துக்கொண்டு எனக்கு பிடித்தவரை சந்திப்பது வரை காத்திருப்பேன். பிடித்தவராகவும் மனதை கவர்பவராகவும் இருந்தால் மட்டும்தான் திருமணம் செய்து கொள்வேன்.

பார்த்தவுடன் இவரைத்தான் மணக்க வேண்டும் என்ற எண்ணமும் வர வேண்டும். அப்படி ஒருவரை சந்திக்கும்போதுதான் திருமணம் செய்து கொள்வேன். அதுவரை திருமணம் செய்துகொள்ள மாட்டேன். பெற்றோர் எனக்கு 20 வயது நிரம்பியதில் இருந்தே திருமணம் செய்துகொள் என்று நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தனர். ஆனால் இப்போது அதுபோல் நிர்ப்பந்திப்பதை நிறுத்தி விட்டனர். எனக்கும் சினிமாவில் நடித்து சாதிக்க வேண்டும் என்ற ஆசை குறையவில்லை.”

இவ்வாறு அனுஷ்கா கூறினார்.