full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

Master-ல நான் எதிர்பார்த்தது கிடைக்கல.! – ஆண்ட்ரியா ஓபன்டாக்

Master-ல நான் எதிர்பார்த்தது கிடைக்கல.! – ஆண்ட்ரியா ஓபன்டாக்

 

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி அர்ஜுன் தாஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்க மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் ஆண்ட்ரியா வில்லி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், மகேந்திரன் மற்றும் பலர் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா இப்படத்தில் நடிப்பது குறித்து அளித்த பேட்டி ஒன்றில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது முழுக்க முழுக்க ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காகத் தான் விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்தேன். இந்தப் படத்தில் இருந்து எனக்கு நிறைய அனுபவம் கிடைத்தது.

வெறித்தனம் பாடலை அவர் தான் பாடினார் எனத் தெரியாமல் இருந்தேன் அதை தெரிந்த பிறகு அவர் என்னிடம் வந்து நீ தமிழ்நாட்டில்தான் இருக்கியா என கிண்டலாக கேட்டார்.

மேலும் கூகுள் கூகுள் பண்ணிப்பார்த்தேன் பாடலாவது ஞாபகம் இருக்கா என கிண்டல் அடித்தார். அந்தப் பாட்டைப் விஜய்யும் ஆண்ட்ரியாவும் இணைந்து பாடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.