full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

க் -movie review

ஜிவி திரைபடத்தின் எழுத்தாளர் இயக்குனராக அறிமுகம் ஆகும் படம் ‘க்’ இத்திரைப்படத்தை அவர் எழுதி இயக்கிருக்கிறார் இதில் புதுமுக நடிகர் யோகேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார் .கால்பந்து வீரரான நாயகன் யோகேஷ் ஒரு விளையாட்டின் போது தலை மட்டும் காலில் காயம் ஏற்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யோகேஷ் அங்கு இருக்கும் ஜன்னல் வழியாக ஒரு கொலை நடப்பதை பார்க்கிறார்.கொலையை தான் பார்த்ததாக போலீஸ் மற்றும் மருத்துவர்களிடம் கூறுகிறார். ஆனால் அவர்களோ அப்படி ஒரு கொலை நடக்கவில்லை என்று நிரூபிக்கிறார்கள். மேலும் யோகேஷுக்கு உளவியல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படுகிறது.

Babu Tamizh's Ikk goes on floor- Cinema express

 

இறுதியில் உளவியல் பிரச்சனையிலிருந்து யோகேஷ் மீண்டாரா? கொலைக்கும் யோகேஷுக்கு சம்மந்தம் இருக்கிறதா? கொலை செய்தது யார் என்பதை யோகேஷ் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதி கதை.படத்தில் வசந்த் சந்திரசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் யோகேஷ். புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு நடித்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல் முக அசைவுகளை கொடுத்து கவனிக்க வைத்திருக்கிறார். இவரது மனைவியாக வரும் அனிகா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.

IKK movie released on December 10 - தமிழ் News - Web Series Online Update -  Web Series Casting & News

தனக்கே உரிய பாணியில் நடித்து அசத்தி இருக்கிறார் குரு சோமசுந்தரம். சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிக்க வைத்திருக்கிறார். இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம். ஒய் ஜி மகேந்திரன் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.ஜீவி படத்திற்கு கதை, திரைக்கதை எழுதிய பாபுதமிழ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். மிகவும் சிக்கலான கதையை எடுத்து இயக்கியதற்கு பெரிய பாராட்டுகள். படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை வசனங்கள் மற்றும் காட்சிகளை கவனித்தால் மட்டுமே படத்தின் கதை தெளிவாக புரியும் அளவிற்கு எடுத்து இருக்கிறார். சின்ன சின்ன வசனங்களுக்கு கூட இறுதியில் அர்த்தம் கொடுத்து இருக்கிறார்.கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை காட்சிகளோடு ஒன்ற வைத்திருக்கிறார். ராதா கிருஷ்ணனின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.மொத்தத்தில் இத்திரைப்படம் ஆரம்பம் முதல் இறுதி வரை சிறிதளவும் கவனம் சிதறாமல் பார்க்க வேண்டிய திரைப்படம்.