full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

பாடகியின் கனவை நனவாக்கிய இசைஞானி!

தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமாகும் அனைவருக்கும் ஒரு ஆசை நிச்சயமாக இருக்கும். இசைஞானி இளையராஜாவின் இசையில் ஒரு பாடலையாவது பாடிவிட வேண்டும் என்பதே அது.

தனது இனிமையான குரலால் அனைவரையும் வசீகரித்த இளம் பாடகி பிரியங்காவிற்கும் இந்தக் கனவு பல நாட்களாக இருந்து வந்தது.

தற்போது இவரது பல நாள் கனவு நனவாகியுள்ளது.

இசைஞானி இளையராஜாவின் இசையில் இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள “நாச்சியார்” படத்தில் இடம் பெறும் பாடலில் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து பாடியுள்ளார்.

பிரயங்காவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதால் மிகுந்த சந்தோஷத்தோடு உள்ளார்.

இந்த பாடலை “பிசாசு” படத்தில் “நதி போகும் கூழாங்கல்” பாடலை எழுதிய Dr.தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியிருப்பது குறிப்பிடத் தக்கது.