இமைக்கா நொடிகள் விமர்சனம்

Movie Reviews
0
(0)

டிமாண்டி காலனி என்ற வித்தியாசமான பேய் படத்தை கொடுத்து அசத்தியவர் அஜய் ஞானமுத்து. இரண்டாவது படத்திலேயே நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யூப் என பல நட்சத்திரங்களை வைத்து பிரமாண்ட படைப்பை கொடுத்துள்ளார், இதிலும் அஜய் தேர்ச்சி பெற்றாரா? பார்ப்போம்.

படத்தின் ஆரம்பத்திலேயே கொலை நடக்கின்றது, கொலையும் செய்துவிட்டு பணத்தையும் கேட்டு மிரட்டுகின்றார் அனுராக் காஷ்யப். நயன்தாரா CBI-யில் வேலைப்பார்க்கின்றார்.

இந்த விஷயம் தெரிந்து பணத்தை கொடுக்காதீர்கள் என்று நயன்தாரா சொல்லியும் அவர்கள் கொடுக்க, வழக்கம் போல் பிணம் தான் அவர்கள் வீட்டிற்கு செல்கின்றது.

இதை தொடர்ந்து இந்த கேஸின் தீவிரத்தை அறிந்து நயன்தாரா களத்தில் இறங்க, இதற்குள் அதர்வா எப்படி சிக்குகின்றார், அனுராக் யார்? எதற்காக இப்படியெல்லாம் செய்கின்றார்? என்பதன் சுவாரஸ்ய திரைக்கதையே இந்த இமைக்கா நொடிகள்.

நயன்தாரா வாரம் வாரம் இவரை திரையில் பார்த்துவிடலாம் போல, அந்த அளவிற்கு பல படங்கள் வருகின்றது, அதிலும் தரமான கதையாக தேர்ந்தெடுத்து நடிக்கின்றார், இதிலும் அப்படியே CBI ஆபிஸராக மிரட்டியுள்ளார், அதே நேரத்தில் விஜய் சேதுபதியுடனான காதல் காட்சியிலும் மெய் மறக்க வைக்கின்றார்.

அனுராக் காஷ்யப் தமிழில் முதன் முறையாக காலடி எடுத்து வைத்துள்ளார், பாலிவுட்டில் மிகச்சிறந்த இயக்குனராக இருக்கும் இவர் நடிப்பிலும் தனி முத்திரை பதித்துள்ளார், அதிலும் வித்தியாசமாக இரத்தம் உறையாமல் அவர் கொலை செய்வது நமக்கே பகீர் என்று இருக்கின்றது.

அதர்வா-ராஷி கண்ணா திரையில் நன்றாக இருந்தாலும், படத்திற்கு இவர்கள் காதல் கதை பெரிதும் ஒன்றவில்லை, படத்திற்கு இவ்வளவு நேரம் காதல் காட்சிகள் தேவையா? என்பது போல் தான் தோன்றுகின்றது.

படத்தின் இரண்டாம் பாதியில் வரும் டுவிஸ்ட் காட்சிகள் நம்மை சீட்டின் நுனிக்கு வர வைக்கின்றது, நாம் யூகிக்கும் எந்த டுவிஸ்டும் படத்தில் இல்லை, நம்மை அசர வைக்கும்படி தான் டுவிஸ்ட் காட்சிகள் உள்ளது.

பாடல்களில் பெரிதும் ஸ்கோர் செய்யாத ஹிப்ஹாப் ஆதி பின்னணியில் மிரட்டி எடுத்துள்ளார், ஒரு விறுவிறுப்பான திரைக்கதைக்கு ஏற்ற பின்னணியை கொடுத்து அசத்தியுள்ளார், அதே நேரம் ராஜசேகரின் ஒளிப்பதிவும் பக்க பலமாக உள்ளது.

மொத்தத்தில் உங்களை கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் இந்த இமைக்கா நொடிகள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.