தளபதி 62 படக்குழுவின் அறிவிப்பு விரைவில்…

News

நடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ் மூன்றாவது முறையாக இணையும் “விஜய் 62” படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், நடிகை வரலட்சுமியும் நேற்று படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.

அரசியல் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் கெட்டது பண்ணும் அரசியல்வாதிகளை தண்டிக்கும் பணக்காரராக விஜய் நடிக்கிறார். அரசியல்வாதிகளாக ராதாரவியும், பழ.கருப்பையாவும் நடிக்கிறார்கள்.

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அதிரடி அரசியல் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் பெயர் மற்றும் முதல் பார்வை போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ந்தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.